உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம்..!

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் 20 நாடுகள் பட்டியலில் லிதுவேனியா மட்டும் புதிதாக இடம்பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி, சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றைக்கொண்டு அளவிடப்படுகிறது.

மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், லெபனான் 2-ம் இடத்திலும் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.