ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது? வெளியானது லிஸ்ட்

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறைகள்: மார்ச் மாதம் இன்னும் 8 ன் நாட்களில் முடிய உள்ளது. மறுபுறம் ஏப்ரல் 1 முதல் நாட்டில் புதிய நிதி தொடங்குகிறது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாக பாதிக்கும் என்றே கூறலாம். அதேபோல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் வேலை இருந்தால், இப்போதிலிருந்தே திட்டமிடலாம். அத்தகைய சூழ்நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது, எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் என்ற முழு விவரம் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஏப்ரல் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது
இந்த முறை ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கும். அதாவது, வங்கிகளில் பணிகளை முடிக்க 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும். இந்த முறை ஏப்ரலில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, ஆண்டு நிறைவு போன்ற விடுமுறைகள் இருக்கும். இதனுடன் சனி-ஞாயிறு வார விடுமுறையும் இருக்கும். எனவே இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2023 இல் வங்கி விடுமுறைப் பட்டியல் குறித்த தகவல்களை ஏற்கனவே பொது மக்களுக்கு வழங்கியுள்ளது, அதன் விவரத்தை இங்கே காணபோம்.

ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி
வங்கி விடுமுறையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஏடிஎம், பண வைப்பு, ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தொடர்ந்து செயல்படும். வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறைகள் மாறலாம்.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1. ஏப்ரல் 1, 2023 (சனிக்கிழமை): ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்
2. ஏப்ரல் 2, 2023 (ஞாயிற்றுக்கிழமை): விடுமுறை
3. ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி
4. ஏப்ரல் 5, 2023 (புதன்கிழமை) – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
5. ஏப்ரல் 7, 2023 (வெள்ளிக்கிழமை) – புனித வெள்ளி
6. 8 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
7. ஏப்ரல் 9, 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
8. ஏப்ரல் 14, 2023 (வெள்ளிக்கிழமை) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / போஹாக் பிஹு / சீரோபா / பைசாகி / பைசாகி / தமிழ் புத்தாண்டு தினம் / மஹா பிசுபா சங்கராந்தி / பிஜூ விழா / பிசு விழா
9. ஏப்ரல் 15, 2023 (சனிக்கிழமை) – விஷு / போஹாக் பிஹு / ஹிமாச்சல் தினம் / பெங்காலி புத்தாண்டு தினம்
10. ஏப்ரல் 16, 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
11. ஏப்ரல் 18, 2023 (செவ்வாய்) – ஷப்-இ-கத்ர்
12. 21 ஏப்ரல் 2023 (வெள்ளிக்கிழமை) – ஈத்-உல்-பித்ர் (ரம்ஜான் ஈத்) / கரியா பூஜை / ஜுமாத்-உல்-விடா
13. 22 ஏப்ரல் 2023 (சனிக்கிழமை) – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் ரமலான் ஈத் (இத்-உல்-பித்ர்)
14. 23 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை
15. 30 ஏப்ரல் 2023 (ஞாயிற்றுக்கிழமை) – விடுமுறை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.