சிக்ஸ் பேக்ஸ் மோகம்… உயிரை பறிகொடுத்த ஜிம் பயிற்சியாளர்… இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!

Chennai Gym Trainer Death: சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள், சபரி முத்து என்கின்ற ஆகாஷ் (25) என்ற மகனும் உள்ளார். பாடிபில்டிங்கில் ஆர்வமுள்ள சபரி முத்து கடந்த 5 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

அதேபோல், நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 22ஆம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னி, ஈரல் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயலிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சபரி முத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 26ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற 
சபரி முத்து கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வருவதற்கு ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னியும் செயலிழந்து சபரி முத்து உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடற்பயிற்சி வல்லுநர்கள் கூறுகையில்,”தற்போதுள்ள இளைஞர்கள் குறுகிய காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக அமைத்து  ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள அதிக்கப்படியான சப்லிமெண்ட் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உடல் உறுப்புக்கள் செயலிழந்து, உயிரிழப்பு ஏற்பட நேரிடும்” என்று கூறுகின்றனர். இதுபோன்று தான் சபரி முத்துவும் அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி மற்றும் மருந்துகளை பயன்படுத்தியதன் விளைவாக உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

இதேபோல் ஆகாஷ் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,”ஆகாஷ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடலை ஏற்ற ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்து அது இதயத்தை பாதித்து உயிர் இழப்பு நேர்ந்துள்ளது” என்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.