ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம் – இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இதுவரை 15 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன..ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மே 28-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. கடந்த முறையை போலவே இந்த ஐ.பி.எல் தொடரிலும் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ : மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்.

குரூப் பி : சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை ஆட வேண்டும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும்.

தற்போது ஐ.பி.எல். போட்டிகள் 12 நகரங்களில் நடக்கிறது. கவுகாத்தியில் முதல் முறையாக போட்டி நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான அங்கு 2 ஆட்டம் நடக்கிறது. இதே போல தர்மசாலாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி நடைபெறுகிறது. பஞ்சாப் கிங்சின் உள்ளூர் மைதானமான அங்கு 2 போட்டி நடைபெற உள்ளது. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மே 21-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 28-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.