சென்னை: Leo Shooting(லியோ ஷூட்டிங்) -காஷ்மீரில் லியோ படக்குழு மிகவும் கஷ்டப்பட்டதை அடுத்து ஷூட்டிங் ப்ளானை நடிகர் விஜய் மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யுடன் மீண்டும் இணைந்த லோகேஷ்
விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த லியோ ப்ரோமோ
விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருக்கும் விஜய்யை தேடி ஒரு கும்பல் வருவதுபோல் அந்த ப்ரோமோவில் காட்சிகள் இருந்தன. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்
இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் காஷ்மீரிலேயே ஷூட் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் படத்தில் விஷுவல்கள் தரமானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட் 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு கடந்த வாரத்தில்தான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது.

எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்
லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குநர் என்ற பெயரை மட்டும் இல்லாமல் பக்கா ப்ளானிங் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். வெற்றிக்கு அவரது திட்டமிடலும் ஒரு காரணம் என்றே கருதப்படுகிறது. ஆனால் காஷ்மீருக்கு படக்குழுவை அழைத்து சென்ற விவகாரத்தில் லோகேஷ் சின்னதாக சறுக்கிவிட்டார்; காஷ்மீரின் க்ளைமேட்டை பொறுத்து படக்குழுவை சரியாக திட்டமிட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் வானிலை மாறும் என்பதால் இதில் லோகேஷ் மீது எந்த தவறும் இல்லை மறுதரப்பினர் கூறுகின்றனர்.

லியோவில் புதிய ப்ளான்
அங்கு கடுமையான குளிர் இருந்ததால் படக்குழு ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டதாம். அவர்கள் கஷ்டப்பட்டது லியோ படத்தின் மேக்கிங் வீடியோவிலேயே அப்பட்டமாக தெரிந்தது. சூழல் இப்படி இருக்க காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் ஒருவாரம் ஷூட்டிங்கிற்கும்; க்ளைமேக்ஸுக்காக ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங்கிற்கும் ப்ளான் செய்திருந்தாராம் லோகேஷ் கனகராஜ். ஆனால் இப்பொது அந்தப் ப்ளானில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதாம்.

விஜய்யின் புதிய ப்ளான்
அதாவது, லியோ படத்துக்கு இனி அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம் எனவும், சென்னையிலேயே மொத்த ஷெட்யூலையும் முடித்துவிட லோகேஷுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளாராம். இதனை லோகேஷ் கனகராஜும் ஏற்றுக்கொண்டதாக பேசப்படுகிறது. எனவே சென்னையில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவிலும், விஜய்யின் வீட்டிலும் ஷூட்டிங்கை நடத்தவும் வேலைகள் ஆரம்பிக்கபப்ட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.