தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக் கூடும்.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 4 நாட்கள் லேசான மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் நேற்று 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தியில் 105 டிகிரி, திருச்சி, வேலூரில் 104, மதுரை, திருப்பத்தூர், திருத்தணியில் 103, நாமக்கல்,பாளையங்கோட்டை, சேலத்தில் 102, சென்னை மீனம்பாக்கம், தருமபுரியில் 101, நாகப்பட்டினம், தஞ்சாவூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.