Vijay Sethupathi: ஷாருக்கானுக்காகத்தான் ஜவான்ல நடிச்சேன்.. காசுக்காக இல்ல.. விஜய்சேதுபதி விளக்கம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மிக குறுகிய காலகட்டத்திலேயே இவர் தனது 50வது படத்தை நெருங்கியுள்ளார். மகாராஜா என்ற இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என தன்னுடைய படங்களின் எல்லைகளை விஜய் சேதுபதி விரிவுப்படுத்திக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார்.

ஜவான் படத்தில் நடித்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதி தமிழில் துணை கேரக்டர்களில் நடித்து அதன்மூலம்தான் கதாநாயகன் வாய்ப்பை பெற்றார். தனக்கு கிடைத்த கேரக்டரைகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். கதாநாயகன் என்றால் 4 ஃபைட், 4 பாட்டு என்று எல்லைக்குள் சிக்கிக் கொள்ளாமல், திருநங்கை, முதியவர் என பல கெட்டப்புகளை போட்டு ரசிகர்களை கவர்ந்தார். விளைவு தற்போது தமிழில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்காமல் டோலிவுட், பாலிவுட என தனது எல்லைகளை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் மட்டுமில்லாமல் கத்ரினா கையிஃப்புடனும் ஒரு படம் என அடுத்தடுத்த கமிட்மெண்ட்களை மேற்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. இதில் இந்த மாதத்தலேயே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட ஜவான், ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பாடல் காட்சி ஒன்றை ரீ சூட் செய்துக் கொண்டிருக்கிறார் அட்லி.

படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாகியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்காக அவர் அதிகமான சம்பளம் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. விஜய் சேதுபதி குறுகிய காலகட்டத்திலேயே தன்னுடைய 50வது படத்தை நெருங்கியுள்ளார். சமீபத்தில் இவரது 50வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருக்கு ரசிகர்களிடையே கிடைத்துவரும் அதிகமான வரவேற்பை தொடர்ந்து இவரது படங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

Actor Vijay Sethupathi clears the air that he did Jawan only for Shah rukh khan

ஆனாலும் சளைக்காமல் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களுக்கு விஜய் சேதுபதியை வில்லனாக்குவதுதான் ட்ரெண்டாகியுள்ளது. அவரும் சளைக்காமல் எந்த கேரக்டராக இருந்தாலும் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறது. சிறப்பாக கல்லா கட்டி வருகிறார். தறபோது வெளியாகியுள்ள மாவீரன் படத்தில் ஸ்பெஷல் வாய்சில் இவர் படம் முழுவதும் பேசியிருந்தார்.

இந்நிலையில் ஜவான் படத்தில் அவர் அதிகமாக சம்பளம் பெற்றதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்வகையில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். ஜவான் படத்தில் தான் ஷாருக்கானுக்காகத்தான் நடித்ததாகவும் அந்தப் படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கொடுக்கவில்லை என்றால்கூட அவருடன் இணைந்து நடித்திருப்பேன் என்றும் விஜய் சேதுபதி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.