“பகத் சார் அந்தக் கதாபாத்திரத்தைப் பாராட்டினார்; இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி!" – சாந்தனு

நடிகர் பஹத்பாசில், நஸ்ரியா மற்றும் சாந்தனு – கீர்த்தி இரு ஜோடிகளும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை நேற்று கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.

அந்தக் கொண்டாட்ட புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சாந்தனு, இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு தன் நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

சாந்தனு, பகத் பாசில், கீர்த்தி, நஸ்ரியா

கடந்த 2014ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி பகத் பாசில் – நஸ்ரியா இவர்களது திருமணம் நடந்தது. அதைப் போல சாந்தனு – கீர்த்தி இவர்களின் திருமணம் 2015ம் ஆண்டில் ஆகஸ்ட் 21ம் தேதி அன்று நடந்திருக்கிறது. பகத், சாந்தனு இவர்கள் இருவரின் திருமண தேதிகளும் ஒரே தேதியில் இருப்பதால், நேற்று சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து படப்பிடிப்பில் இருந்த சாந்தனுவிடம் கேட்டேன்.

கொண்டாட்டத்தில்..

”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களோட திருமண நாள் ஒரே தேதியில் வர்ற விஷயம், ஏ.எல்.விஜய் சாருக்கு தெரிய வந்திருக்கு. அதை கொண்டாடலாம்னு எனக்கும், கீர்த்திக்கு போன் பண்ணிச் சொன்னார். அதைப் போலதான் பகத் சார், நஸ்ரியா அவங்களுக்கும் தனித்தனியா அவர் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கார். ரொம்பவே சந்தோஷமா கேக் வெட்டிக் கொண்டாடினோம். இப்படி ஒரு மகிழ்வான விஷயம் நடக்கக் காரணமாக இருந்த ஏ.எல். விஜய் சாருக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன்.

பெங்களூர்ல படப்பிடிப்பில் இருந்து, பஹத் பாசில் சார் வந்திருந்தார். முதல் முறையா அவரை சந்திச்சேன். எளிமையா பழகினார். அவரோட அப்பா பாசில் சார் இயக்கின ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்துல எங்க அம்மா நடிச்சிருப்பாங்க. அதை அவர் ஞாபகம் வச்சிருந்தார். அப்பா இந்தியில் இயக்கின படங்கள் பத்தியும் ஆர்வமா கேட்டார். அவரோட சினிமா அனுபவங்களையும் என்கிட்ட பகிர்ந்துகிட்டார். இன்னொரு முக்கியமான விஷயம், ‘பாவக்கதைகள்’ல ‘தங்கம்’ கதையை அவர் ரொம்ப ரசிச்சுப் பேசினார். ‘இயல்பும் யதார்த்தமுமாக அந்தக் கதாபாத்திரத்தை பிரதிபலிச்சிருக்கீங்க’னு அவர் பாராட்டினது சந்தோஷமா இருக்கு. நடிப்பு அசுரன்னு பெயர் வாங்கின அவர் என்னோட நடிப்பை பாராட்டினது எனர்ஜியா இருக்கு. அதனால விஜய் சாருக்கு இன்னொரு நன்றியையும் சொல்லிக்கறேன்.” என்கிறார் சாந்தனு.

இந்தக் கூட்டணி படத்தில் இணைகிறார்களா என்ற கமென்ட்டுகள் நிறைய வந்தன. ஆனால், விஜய்யின் இயக்கத்தில் பகத் நடிக்கிறார் என்ற தகவலில் உண்மையில்லை. ஏ.எல் விஜய் இப்போது பிரகாஷ்ராஜூடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அதை ‘ரங்கோலி’ வாலி மோகன் தாஸ் இயக்கி வருகிறார். சாந்தனுவின் நடிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாக உள்ளது. மேலும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஹன்சிகாவுடன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.