Huge Discount On EV Car: கார்களை வாங்குவது பலரின் கனவுகளில் ஒன்று. திருமணம் செய்வது, வீடு கட்டுவது போன்றவை எப்படி ஒருவரின் வாழ்வில் முக்கிய தருமணமோ கார் வாங்குவதும் ஒருவரின் வாழ்வில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. எனவே, பலரும் கார்களை வாங்க சேமிப்பு முதல் பல்வேறு நிதி திட்டமிடல்களை செய்கின்றனர்.
ஒருசிலர் நீண்ட காலத்திற்கு வங்கியில் கடன் வாங்க துணிகின்றனர். வேறு சிலர் கார்களை வாங்க நீண்ட கால சேமிப்பையும் இதில் செலவழிக்கின்றனர். கார் வாங்குவது முதலீடு இல்லை என்றாலும் அதன் தேவையின் பொருட்டு வாங்குவது சரியாக இருக்கும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளான கார்களுக்கு, இரு சக்கர வாகனங்களுக்கும் நல்ல சலுகைகளை அளிப்பது வாடிக்கையாகும். இந்த காரணத்தினால் பலரும் தீபாவளி அன்றோ அல்லது அதற்கு முன்போ காரை வாங்க திட்டமிடுவார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், வர பண்டிகை காலங்களில் நீங்கள் எலக்ட்ரிக் SUV வகை கார் ஒன்றை வாங்க நினைத்தால், இரண்டு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும் அந்த கார் குறித்து இதில் காணலாம். அது வேறேதும் இல்லை ஹூண்டாய் கோனா EV கார்தான். ஹூண்டாய் நிறுவனத்தில் இந்தியாவில் ஒரே ஒரு EV மாடல் உள்ளது. அது கோனா EV கார் மட்டும்தான் ஆகும். இந்த நிறுவனம் நடப்பு செப்டம்பர் மாதத்தில் இந்த கார் மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.
நடப்பு செப்டம்பரில் ஹூண்டாய் கோனா EV காரை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 2 லட்சத்தைச் சேமிக்கலாம். இது பணத் தள்ளுபடி. அதாவது, SUV வகை EV காரின் விலை எதுவாக இருந்தாலும், ரொக்கத் தள்ளுபடியாக ரூ.2 லட்சம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோனா எலக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ. 23.84 லட்சம் முதல் ரூ. 24.03 லட்சம் வரை (Ex-Showroom) விற்கப்படுகிறது. zeenews.india.com/tamil/lifestyle/top-5-fuel-efficient-mid-size-suvs-in-india-that-gives-more-mileage-457005
ஹூண்டாய் கோனா EV ஒரு மின்சார மோட்டார் உள்ளது. இது 39 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ARAI சான்றளிக்கப்பட்ட வரம்பு 452 கிலோமீட்டர்கள் வரை தாங்கும். அதாவது ஒருமுறை முழுமையாக அந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 452 கி.மீ., வரை செல்லலாம். செயல்திறனைப் பற்றி பேசுகையில், இந்த SUV மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய 9.7 வினாடிகள் எடுக்கும். அந்த அளவிற்கு நல்ல பிக்-அப் உள்ளது. இது ஒற்றை வேக பரிமாற்றத்துடன் வருகிறது. இதில் Eco, Eco Plus, Comfort மற்றும் Sport என நான்கு டிரைவிங் மோடுகள் உள்ளன.
இந்த காரின் சிறப்பம்சங்கள்
இது 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங், சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், 10-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆறு ஏர்பேக்குகள், வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், அனைத்து டிஸ்க் பிரேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் பின்புற கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
மேலும் படிக்க | டாடாவின் புதிய காரின் பெயர் என்ன? Tata Azura என்ற பெயர் வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்