கோவை, நீலகிரியில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (செப். 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் … Read more

சந்திரயான்-2 விண்கலம் எடுத்த லேண்டர் படங்கள் – இஸ்ரோ வெளியீடு

சென்னை: நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டன. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள்ஆய்வு செய்து பல அரிய தகவல்களையும் நமக்கு அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், … Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் – மொராக்கோவில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 300-க்கும் … Read more

விஜய் 68ல் பாலிவுட் பிரபலம்

நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறப்பு ரோலில் பாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் … Read more

நாசாவின் புதிய திட்டத்துக்கு தலைவரான இந்திய விஞ்ஞானி| Indian scientist who is the head of the new program of NASA

வாஷிங்டன்அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ வின், ‘சந்திரன் – செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்துள்ள அமெரிக்கா, அடுத்த கட்டமாக நிலவில் நீண்ட காலம் மனிதர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா என்ற … Read more

என்ன நயன் இதெல்லாம்.. உன்னோட படம்னு நீ கூட அலர்ட் பண்ணல.. ஜவானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு ஒரு பக்கம் பிரபலங்கள் பாராட்டு மழையை பொழிந்து வரும் நிலையில் மறுபக்கம் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களைப் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இயக்குநர் அட்லீ ஜவான் திரைப்படத்தில் ஒரு படத்தின் கதையை எல்லாம் சுடவில்லையாம். ஒட்டுமொத்தமாக 23 படங்களின் கதையை சுட்டு இப்படி ஒரு பிரம்மாண்ட மோசடியை செய்துள்ளார் என ரசிகர்கள் கழுவி

டெல்லியில் ஜி-20 மாநாடு: கூட்டுப்பிரகடனம் வெளியீடு..!!

மாநாட்டின் முதல் நாளான நேற்றைய நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. Live Updates 2023-09-09 19:13:18 9 Sep 2023 11:42 PM GMT ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜப்பான் பிரதமரையும் சந்தித்தார் பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது. ஜி-20 உச்சி மாநாடு … Read more

சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் மனிஷ் கவுசிக் இறுதிப்போட்டிக்கு தகுதி

புதுடெல்லி, முஸ்தபா ஹஜ்ருலாஹோவிச் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி போஸ்னியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானின் முகமது சர்வாரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப்போட்டியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த முகமது சோத்தை சந்திக்கிறார். இதேபோல் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான … Read more

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் சைபர்கிரைம் தாக்குதல்; சுகாதார சேவைகள் முடக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சர்வர்கள் அணைத்து வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கின … Read more

கூடங்குளம் அணு உலைகளுக்கான ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் தரைதட்டியது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த இழுவை கப்பல் தரைதட்டி நின்றது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள முதல் மற்றும் 2-வது அணு உலைகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக முக்கிய உபகரணங்கள் … Read more