21-ம் நூற்றாண்டில் மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி, முன்னேறிச் செல்ல வேண்டும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஜி-20 உச்சி மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை, ‘எல்லோருக்கும் எல்லாம்’ மந்திரம் நிச்சயம் மாற்றும் என்று உறுதிபடக் கூறினார். ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு … Read more

உலக தற்கொலை தடுப்பு தினம்| World Suicide Prevention Day

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்திந்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர் எந்தளவு கஷ்டப்படுவர் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிரச்னைகள் இல்லாத மனிதர்களே … Read more

இறுதி கட்டத்தை எட்டிய வணங்கான்

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க இருந்த படம் 'வணங்கான்'. படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பாலா தனது பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த … Read more

இந்தியாவுக்கு உயர்தொழில்நுட்பம்: அமெரிக்க பார்லி.,யில் மசோதா| High Technology for India: Bill in US Parl

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்,-இந்தியாவுக்கு உயர் தொழில்நுட்பங்கள், சாதனங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டில், இரண்டு முக்கிய எம்.பி.,க்கள் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், சபையின் இந்தியக் குழுவின் … Read more

GP Muthu New Car: கலக்குறீங்க தலைவரே.. 2வது கார் வாங்கிய ஜிபி முத்து.. என்ன விலை தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து புதிதாக இன்னொரு கார் ஒன்றையும் வாங்கிய வீடியோவை சற்றுமுன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கடந்த பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் அந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியாத நிலையில், வாக்கவுட் ஆன

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுப்பு: பவன் கல்யாண் சாலையில் படுத்து திடீர் போராட்டம்..!!

அனுமஞ்சிப்பள்ளி, ஆந்திர முதல்-மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று காலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதோடு கடைகள், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே சந்திரபாபு கைது செய்யப்பட்டதற்கு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி.!

புளோம்பாண்டீன், தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று இருந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தன் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் … Read more

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

ரபட், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் … Read more

“சனாதனம் என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம்” – ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மதுரை: “சனாதனம் என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம்” என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். செப்.11-ல் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார். சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால் இந்தியாவை பாரத் என மாற்ற முடிவு செய்வதும் சரிதான். முதலமைச்சருக்கு … Read more

“அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது” – ஜி20 விருந்துக்கு அழைக்கப்படாதது குறித்து கார்கே கருத்து 

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது சர்ச்சை ஏற்படுத்திய இருக்கும் நிலையில், அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது என்று தனது மவுனத்தை கார்கே கலைத்துள்ளார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அதன் 18 உச்சி மாநாடு டெல்லி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து இன்று … Read more