`இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது' என்ற கார்கேவின் விமர்சனம்? – ஒன் பை டூ

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை அமைப்புகளை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாடாளுமன்றத்துக் குள்ளேயே எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ‘உங்கள் வீட்டுக்கு இ.டி ரெய்டு வரும்’ என்று பா.ஜ.க-வினர் மிரட்டுவதே சாட்சி. அதானியின் ஊழலைப் பற்றிப் பேசிவிடுவாரே என்று அவசர அவசரமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்த … Read more

புதுச்சேரியில் முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் பேனர்கள்: மவுனம்காக்கும் ஆட்சியர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் இருந்தும், முதல்வர் பிறந்த நாளைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நகரெங்கும் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்லஇயலாத வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. பேனரால் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்காத ஆட்சியர் மீது டிஜிபியிடம் புகாரும் தரப்பட்டுள்ளது. தமிழகமும், புதுச்சேரியும் நிலவியல் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று கலந்த பகுதிகளே. … Read more

மூன்று நாடுகளின் தலைவர்களுடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள தமது இல்லத்தில் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்த வண்ணம் … Read more

மாரிமுத்து… நானும் அவரும் அந்தக்காலத்துல… சீமான் சொன்ன உருக்கமான சம்பவம்!

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்திலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சீமான், மாரிமுத்து குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன் உயிர்க்கினிய சகோதரர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து பேரதிர்ச்சியும், பெரும் … Read more

Indian 2: இந்தியன் 2-ல் நடித்த நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா இப்போ மாரிமுத்து மரணம்: அதில் 3 பேருக்கு மாரடைப்பு

படங்கள், டிவி சீரியல்களில் நடித்து வந்த மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேச சென்னை வடபழனியில் இருக்கும் ஸ்டுடியோவுக்கு சென்ற அவர் பிணமாக வீடு திரும்பியிருக்கிறார். பிச்சிகிட்டு போன ஜவான் பட்ஜெட் – படக்குழு தப்பிக்க வாய்ப்பு இருக்கா.? நன்றாக இருந்த மாரிமுத்து இப்படி திடீரென்று இறந்துவிட்டாரே என பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் … Read more

சீதா ராமன் அப்டேட்: உயிருக்கும் போராடும் சத்யன்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் மகா

Seetha Raman Today’s Episode Update: உயிருக்கும் போராடும் சத்யன்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் மகா, மீரா எடுத்த முடிவு – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

பெரியார், கருணாநிதி பேசியதை உதயநிதி பேசியுள்ளார் : கே எஸ் அழகிரி

சென்னை கடந்த 70 ஆண்டுகளாகப் பெரியார்,அண்ணா, கருணாநிதி பேசியதை உதயநிதி பேசியதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நேற்றுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நினைவு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் பெரம்பூரில் நடைபெற்ற பேரணியை கே.எஸ்.அழகிரி … Read more

நடனமாடி மகிழ்ந்த ஐ.எம்.எப்., தலைவர்| I.M.F. was happy to dance. Chairman

புதுடில்லி: ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சர்வதேச நிதியத்தின் தலைவர் , ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடனத்தை ரசித்து தானும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நாளை ஜி 20 மாநாடு டில்லி பிரகதி மைதானத்தின் உள்ள பாரத மண்டபத்தில் மோடி தலைமையில் துவங்குகிறது. நேற்று மாலை முதல் ஜி 20 உறுப்புநாடுகளின் தலைவர்கள் டில்லி விமான நிலையம் வந்திறங்கினர். அப்போது ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவா, டில்லி பாலம் … Read more

கவினுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்

இளன் இயக்கத்தில் கவின் 'ஸ்டார்' என புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கின்றார் என அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் என இருவரும் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 64 பேர் பலி | Terrorist rampage: 64 killed

பமாகோ,- மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில், பாதுகாப்பு படை வீரர்கள், 15 பேர் உட்பட, 64 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் திம்புக்டு நகரில் உள்ள நதியில் சென்ற பயணியர் படகை குறிவைத்து, நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதேபோல், காவ் பகுதியில் உள்ள ராணுவ முகாமிலும் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த இரு தாக்குதல் சம்பவங்களிலும், 49 பொதுமக்கள், 15 பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம், … Read more