அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் உருவ பொம்மை எரிப்பு @ மதுரை

மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை மதுரையில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரிக்க முயன்றதை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சனாதனத்தை ஒழிப்போம் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி என அறிவித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாமியாரை கண்டித்தும் இன்று … Read more

‘ஜல் ஜீவன்’ மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ஜல் ஜீவன் இயக்கம், கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதில் 13 கோடி என்ற மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகம் கூறியிருப்பதாவது: ஜல் ஜீவன் இயக்கம், 2019 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இயக்கத்தின் தொடக்கத்தில் வெறும் 3.23 கோடி கிராமப்புற வீடுகளில் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. இது வெறும் 4 ஆண்டுகளில் 13 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு தனது 73 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய … Read more

ரொம்ப கவலையா இருக்கு – உதயநிதிக்கு ஆதரவாக களமிறங்கிய பா.ரஞ்சித் – என்ன சொன்னார் தெரியுமா?

சென்னையில் நடந்த தமுஎகச மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, டெங்கு மற்றும் மலேரியாவைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்பட முன்னணி தலைவர்களே உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். உதயநிதிக்கு எதிராக புகார் அளிப்பது, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவது தொடர்ந்து வருகிறது. ஒருபடி மேலே சென்ற அயோத்தி சாமியார், சனாதனம் ஒழிய வேண்டும் என்று … Read more

ரெட் அலர்ட்: வெளுத்து வாங்கும் கனமழை.. தத்தளிக்கும் ஹைதராபாத்… பள்ளிகளுக்கு விடுமுறை!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத்தில் 5 ஆம் தேதியான இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஹைதராபாத்துக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நாள் முழுவதும் நகரில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிகக்கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. கனமழையை தொடர்ந்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் … Read more

மாணவனின் உயிரை பறித்த ஒரே ஒரு 'சிப்ஸ்'.. அப்படி என்ன சிப்ஸ் அது..? பெற்றோர்களே உஷார்

நியூயார்க்: ஒரே ஒரு சிப்ஸை சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த சிப்ஸ் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இரண்டு விஷயம் மிகவும் ஃபேமஸ். ஒன்று, வீடியோ ரீல்ஸ் செய்வது. மற்றொன்று, சேலஞ்ச் என்ற பெயரில் ஏதாவது கோமாளித்தனத்தை செய்வது. இந்த இரண்டும் சாதாரண பொழுதுபோக்கு தானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த இரண்டு விஷயங்களால் உலகில் … Read more

'சலார்' ரிலீசில் திடீர் சிக்கல்: ஒரே நாளில் வரிசைக்காட்டும் ஐந்து படங்கள்.!

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியவர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது நடித்து வரும் ‘சலார்’ படத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீசில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘சலார்’ படம் உருவாகியுள்ளது. ‘கேஜிஎப்’ புகழ் பிரசாந்த் நீலின் அடுத்த படைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக … Read more

G-20: வெளிநாடு விருந்தினர்களுக்கு ₹ 18 கோடி வாடகையில் 20 லிமோசின் கார்கள்!

G-20 உச்சி மாநாட்டிற்காக அரசாங்கம் 20 குண்டு துளைக்காத லிமோசின் கார்களை குத்தகைக்கு எடுத்துள்ளது, அதற்கு ரூ.18 கோடி செலவாகும். எனவே இந்த கார்களின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

India vs Bharat: இத்தனை நாள் பெருமையாக இல்லையா… சேவாக்கிற்கு தமிழ் நடிகர் பதிலடி!

India vs Bharat: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு ஆதரவளித்து சேவாக் பதிவிட்ட நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால் அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரோன் பயிற்சி… அதுவும் இந்தியாவில் முதல் முறையாக – முழு விவரம்

Chennai Latest: மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ட்ரோன்களை இயக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பயிற்சி தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பணி வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களை இதில் காணலாம். 

800 Trailer: "நான் தமிழன் மட்டுமல்ல, கிரிக்கெட்டர்!" பரபரப்பைக் கிளப்பும் முத்தையா முரளிதரன் பயோபிக்

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800′ திரைப்படம் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து, கடும் கண்டங்களுக்குப் பிறகு ‘நன்றி வணக்கம்’ என்று கூறி விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகியது எல்லோரும் அறிந்ததே. 800 திரைப்படம் – விஜய் சேதுபதி போஸ்டர் இதற்கு முக்கியக் … Read more