சென்னை: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இரண்டாவதாக அவர் இயக்கியுள்ள அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் கூட்டணி இணையவுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்காக சூப்பரான ஸ்க்ரிப்ட் ஒன்று ரெடியாக இருப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.