Month: November 2023
Heroin worth Rs 1 crore seized | ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
பாலக்காடு:பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். -கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்திய சோதனையின் போது, இருக்கைக்கு கீழே இரண்டு பார்சல்கள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றை எடுத்து சோதனை செய்த போது, 140 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் … Read more
சோனியாவாக நடிக்கும் ஜெர்மன் நடிகை
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது. இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், … Read more
Suriya on Karthi: கார்த்தியை பார்த்து பொறாமையாக இருக்கிறது.. வெளிப்படுத்திய சூர்யா!
சென்னை: நடிகர் கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் கடந்த சில வாரங்களாக களைகட்டின. படத்தின் இசை வெளியீடு, பேட்டிகள் போன்றவற்றில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டனர். நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி உதவி
"நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது- ப.சிதம்பரம் எதிர்ப்பு
ஜெய்பூர், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் அம்மாநில சட்டசபையில், பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தாம்பத்திய உறவில் கணவன்மார்களின் செயல்களால்தான் குழந்தை பிறப்பு அதிகரிக்கிறது. படித்த பெண்ணாக இருந்தால், கணவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று அவருக்கு தெரியும். தற்போது, படித்த பெண்கள் அதிகரித்து வருவதால், குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். நிதிஷ்குமாரின் பேச்சு, பெண்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், … Read more
மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி, 2023 மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி வரும் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 10-ந் தேதி வரை நடைபெற உ ள்ளது. மகளிர் ஜூனியர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அதற்கு அடுத்ததாக நவம்பர் 30-ந் தேதி ஜெர்மனியுடன் விளையாடுகிறது. டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் பெல்ஜியத்துடன் விளையாடுகிறது. இந்த … Read more
90ஸ் கிட்ஸ்களின் நண்பன் 'ஒமீகிள்' இணையதளம் மூடப்பட்டது
வாஷிங்டன்: இணையத்தில் பயனர்கள் தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் பதிவு செய்யாமல், மற்றவர்களுடன் பழக அனுமதிக்கும் தளம்தான் ஒமீகிள். சாட்டிங் செய்ய, பேச மற்றும் கலந்துரையாடுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது. இதை 2009ஆம் ஆண்டு லீஃப் கே-புரூக்ஸ் என்பவர் தனது 18வது வயதில் உருவாக்கினார். தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது மார்ச் 2010-ல் இத்தளம் வீடியோசாட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. முதலில், இந்த தளத்தில் 13 வயதுள்ள சிறுவர்கள் தனது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியுடன் இணையதளத்தைப் … Read more
ஐடி, அமலாக்கத் துறை ‘மத்திய அரசு ஏஜென்சி’ என்றால் தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சி? – ஐகோர்ட் கேள்வி
சென்னை: “வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்?” என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்ய மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கோரி ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் … Read more
மஹுவா மொய்த்ரா விவகாரம்: விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக மக்களவை நெறிமுறைக் குழு தகவல்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு மக்களவை நெறிமுறைக் குழுவின் விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக அக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவை நெறிமுறைக் குழு தலைவர் வினோத் குமாா் சோன்கா் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது “தர்ஷன் ஹிரானந்தானியின் பிரமாணப் பத்திரம், நிஷிகாந்த் துபேவின் புகார் மற்றும் மஹுவா மொய்த்ரா அளித்த வாக்குமூலம் என அனைத்து ஆதாரங்களையும் நெறிமுறைக் குழு ஆய்வு செய்து … Read more
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த தடையை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. வழக்குகளை விசாரித்த … Read more