சமந்தாவா இப்படி… – நீச்சல் உடையில் போட்டோ வைரல்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா வெப்சீரிஸ் மூலம் ஹிந்தியிலும் கால்பதித்தார். தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். கணவர் நாகசைதன்யாவை பிரிந்த சமந்தா உடலில் ஏற்பட்ட தசை அழற்சி நோயால் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி, அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது குணமாகிவிட்ட அவர் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

அதேசமயம் சமூகவலைதளத்தில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி வீடியோ, போட்டோ உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ள அவர் அங்குள்ள சுற்றுலாதளம் ஒன்றில் நீச்சல் உடையில் குளிக்கும் செக்ஸியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதன் உடன் தியானம் மேற்கொள்ளும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். சமந்தாவின் நீச்சல் உடை போட்டோக்கள் வைரலாகி சமந்தா இப்படி என ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.