ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி

ஜெய்ப்பூர்: காய்ச்சல் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கடும் காய்ச்சல் காரணமாக நேற்று (பிப்.02) நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று மற்றும் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது … Read more

தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அதிக நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை. 

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ் கட்டாயம்! தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம்  மறுப்பு தெரிவித்து உள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க  முடியாது என உத்தரவிட்டு உள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு பணிகளில் சேர கட்டாயம் தமிழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.  இதை செயல்படுத்தும் வகையில்,  கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் … Read more

Appointed Abhay Thakur as Indian Ambassador to Russia | ரஷ்யாவுக்கான இந்திய தூதராக அபய்தாக்கூர் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரஷ்யாவுக்கான இந்திய தூதராக அபய் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தற்போது ரஷ்யாவுக்கான இந்தியாவின் தூதராக இருந்த பவன் கபூர் வெளிவிவகார அமைச்சகத்தின் புதிய செயலாளராக மேற்கு பிராந்தியத்திற்கும் ஆஸ்திரியா தூதராக இருந்த ஜெய்தீப் மசூம்தார் வெளிவிவகார அமைச்சகத்தின் புதிய செயலாளராக கிழக்கு பிராந்தியத்திற்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அபய் தாக்கூர், ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற்ற … Read more

பாதி தலைமுடி, மீசை தாடியுடன் இரண்டு மாதங்கள் கெட்டப்பை கட்டி காத்த மோகன்லால் பட வில்லன்

மலையாளத்தில் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஒரு பேண்டஸி படமாக மலைக்கோட்டை வாலிபன் படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யத் தவறினாலும் வித்தியாசமான முயற்சியை விரும்பும் ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டவே செய்கிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. அதில் கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் தனிஷ் சேட் என்பவர் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக … Read more

Kamal -Pa Ranjith combination: கமலுடன் இணையும் பா ரஞ்சித்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். கமல் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் உற்சாகமாக கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருபுறம் சிவகார்த்திகேயனின் SK21 மற்றும் சிம்புவின் STR48 படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை: அப்பாவு

திருநெல்வேலி: “தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை” என்று சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியிலுள்ள பச்சையாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதையே தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதுமையின் … Read more

சிவ சேனா மூத்த தலைவரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கைது – மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) தலைவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ கணபதி கெய்க்வாட்டுக்கும், சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) மூத்த தலைவர் மகேஷ் கெய்க்வாட்டுக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணபதி கெய்க்வாட் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிலத்தை … Read more

சினிமாவில் இருந்து விலகிய விஜய்..கண்கலங்கிய குட்டி ரசிகர்! வைரல் வீடியோ..

Vijay Quits Cinema: Fans Raction: நடிகர் விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.