தப்புமா ஜார்கண்ட் அரசு? திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

ராஞ்சி: புதிதாக ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுள்ள சம்பாய் சோரன் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநிலச் சட்டசபையில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்குப் பிறகு Source Link

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளிவரும் ராகினி படம்

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் முதலும், கடைசியுமாக நடித்த தமிழ் படம். அதன் பிறகு கன்னட சினிமாவில் பிசியாக நடித்தவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிருக்கிறார். 10 வருடங்களுக்கு பிறகு அவர் … Read more

Marriage against Islamic practice: Imran Khan jailed for 7 years | இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம்: இம்ரான் கானுக்கு 7 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர்: இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் குறித்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ராவுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. பிரதமர் ஆக இருந்த போது கிடைத்த பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்று மோசடி செய்த வழக்கில், அவருக்கும், … Read more

Raghava lawrence: விஜயகாந்த் மகன் படத்தில் இணைந்த ராகவா லாரன்ஸ்.. சொன்னபடி நடந்த ஹீரோ!

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மரணம் தமிழகத்தில் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜயகாந்தின் மரணம் அவரது மகன்களை மிகப்பெரிய அளவில் பாதித்ததை

இஸ்லாமிய விதிமுறைகளை மீறிய திருமணம்: இம்ரான் கான் & மனைவிக்கும் ஏழாண்டு சிறை!

Un-Islamic nikah Case: ஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு ஏழாண்டு சிறைதண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம்…

ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத சடலம்… டி-சர்ட் மூலம் துப்பு துலக்கிய குன்றத்தூர் போலீஸ்!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 30.12.2023-ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் மிதந்து வந்தது. சடலத்தில் வெட்டு காயங்கள் இருந்ததால் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தார். தலை, கைகள், கால்கள் இல்லாததால் சடலத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்தது. இந்தநிலையில் சடலத்தில் சந்தன நிற டி சர்ட் மட்டும் இருந்தது. அதை வைத்து போலீஸார் வழக்கை விசாரிக்கத் தொடங்ங்கினர். அதே நேரத்தில் தமிழகத்தில் காணாமல் போனவர்களின் … Read more

‘‘சட்டம் பயிலும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வரவேண்டும்’’ – ப.சிதம்பரம் பேச்சு @ காரைக்குடி

காரைக்குடி: ‘‘சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும்’’ என காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி பூமிபூஜையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2 ஆண்டுகளுக்கு முன் அரசு சட்டக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. தற்போது 285 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.100.42 கோடியில் 19.2 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான … Read more

ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான வாக்குறுதியே பட்ஜெட் அறிவிப்புகள்: பிரதமர் மோடி

சாம்பல்பூர்(ஒடிசா): ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் வாக்குறுதிகளே பட்ஜெட் அறிவிப்புகளாக வெளி வந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் சாம்பல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களின் ஏழ்மையைப் போக்கிய மத்திய அரசின் கொள்கைகளை இந்த பட்ஜெட் மேலும் வலுப்படுத்தும். ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மத்திய அரசின் வாக்குறுதிகளே பட்ஜெட் அறிவிப்புகளாக வெளி வந்துள்ளன. இளைஞர்கள், பெண்கள், … Read more

Vijay: `ஒரு பக்கம் உதயசூரியன்; இன்னொரு பக்கம் இரட்டை இலை!' – விஜய் படங்களும் அரசியல் டச்சும்!

தமிழக அரசியலின் புதிய என்ட்ரி நடிகர் விஜய். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து பரபரவென வேலைகளில் இறங்கியிருக்கிறார். விஜய்யை சுற்றி அரசியல் சர்ச்சைகளும் விவாதங்களும் பல ஆண்டுகளாகவே நீடித்துக் கொண்டிருந்தது. காரணம், அவரின் படங்களும் படங்கள் சார்ந்த நிகழ்வுகளில் அவர் பேசிய பேச்சுகளுமே. விஜய் அரசியலுக்காக சினிமாவிலிருந்து விலகுகிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அவருக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொடுத்ததே அவரின் சினிமாக்கள்தான். தன்னுடைய படங்கள் வழியேதான் விஜய் தனது அரசியல் இமேஜை … Read more

10 ஆண்டு தவம்; பதுங்கிய விஜய்! செக் வைத்த போயஸ் கார்டன்? Time to lead ஞாபகம் இருக்கா பிகிலு?

விஜய்யின் ‘புதிய கீதை’ படம்தான் முதன்முதலாகச் சர்ச்சையைத் தொடங்கி வைத்தது. அந்தத் தலைப்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் புனித நூலை அவமதிப்பதாக உள்ளதாக சர்ச்சை வெடித்தது. அப்போது எல்லாம் விஜய்க்கு அரசியல் கனவுகள் இல்லை. ஆகவே, அவர் அடக்கமாக இருந்தார். அதன்பின்னர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது ‘தலைவா’தான். அந்தப் படத்தில் போஸ்டரில் ரசிகர் Source Link