கடன் தொல்லை, பள்ளிபாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை! பேரதிர்ச்சி

Namakkal Pallipalayam kidney selling : கடன் தொல்லை காரணமாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னி விற்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.  

Actor Simbu: மாதவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.. அப்ப எஸ்டிஆர் 48?

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர்48 படத்தில் கமிட்டானார். வரலாற்று பின்னணியில் இந்த படத்தின் கதைக்களம் உருவாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் இந்த படத்தில் ஹீரோ

தமிழகத்தில் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சம்

சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 9 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும், கோடை காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் இருக்கும். கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தினசரி மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த மார்ச் மாதம்30-ம் தேதி தினசரி மின்தேவை எப்போதும் இல்லாத அளவாக 19,387 மெகாவாட்டாக அதிகரித்தது. தொடர்ந்து ஏப்.3-ம் … Read more

மேற்கு வங்க மாநில ஆளுநர் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண்ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஆளுநர் ஆனந்த் போஸ், மாநில அரசுடன் மோதல்போக்கை கொண்டிருக்கிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் … Read more

ப்பா.. கோட் சூட்டில் மாஸ் காட்டிய அமிதாப் பச்சன் – ரஜினிகாந்த்.. மும்பையில் வேட்டையன் வெறித்தனம்!

மும்பை: வேட்டையன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு பறந்து சென்றார். இந்நிலையில், அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூர்யாவை வைத்து ஜெய்பீம் எனும்

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: “உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம். பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம் ஆகியுள்ளதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், ஒரு கொடும் யதார்த்தத்தை எதிர்கொள்வோம்: பாஜக ஆட்சியில் பத்திரிகை … Read more

அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு: குலாம் நபி ஆசாத் வரவேற்பு

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று கூறியதாவது: அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு அரசியல் கட்சிகளுக்கு நிம்மதி அளித்துள்ளது. இதனால் அவற்றுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த சரியான முடிவை எடுத்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு காரணமாக முகலாய சாலை மூடப்பட்டுள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரியை ஸ்ரீநகருடன் இணைக்கும் இந்த சாலை ஷோபியான் – பூஞ்ச் இடையிலான பயண தூரத்தை … Read more

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க  சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,  மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு  உத்தரவிட்டுள் வழக்கை ஒத்தி வைத்ததது. கலால் கொள்கை வழக்கில், … Read more

கவினை இன்னும் அம்மணமாத்தான் பார்க்கல.. பங்கம் பண்ண நெல்சன்.. அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் புரமோ தற்போது வழக்கம் போல நெல்சன் ஸ்டைலில் செம காமெடியாக வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கும் படங்களுக்கு எப்படி புரமோ இருக்குமோ அதே அளவுக்கு அவரது முதல் தயாரிப்பு படமான கவினின் ‘பிளடி பெக்கர்’ (Bloody Beggar) படத்திற்கும்

தீவட்டிப்பட்டி கோயில் விழா பிரச்சினையில் தொடரும் பதற்றத்தால் கடைகள் அடைப்பு: மோதலில் ஈடுபட்ட 31 பேர் கைது

சேலம்: சேலம் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 31 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பதற்றமான சூழலல் நிலவி வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வருவது வழக்கம். இந்தாண்டு, கோயில் திருவிழாவை மற்றொரு தரப்பினரும் … Read more