“அச்சப்பட்டு ஓட வேண்டாம்” – ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் மீது பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் ஒரு பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய பிரதமர் மோடி, “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் … Read more

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி… வீடியோ

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ராகுல்காந்தி, அங்கு தனது தாயார் சோனியா, சகோதரி பிரியங்காவுடன்  வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் ராகுலை எதிர்த்து, பாஜக சார்பில்  தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் உ.பி. மாநிலம் ஃபர்சாத்கஞ் விமான நிலையத்திற்கு தனது தாயார்  சோனியா காந்தி, பிரியங்கா காந்தி,  அவரது கணவர் வத்தா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி … Read more

Ilaiyaraaja: ஊட்டிவிட்ட தகப்பன்சாமி.. ஆசையுடன் வாங்கிக் கொண்ட யுவன்சங்கர் ராஜா!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து பல ஆண்டுகளைக் கடந்து 1400-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். தற்போதும் இசையமைத்து வருகிறார். தான் எப்போதும் இசைஞானி தான் என்பதை தொடர்ந்து தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் புலப்படுத்தி வருகிறார். இவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தற்போது விஜயின் கோட் படத்திற்கு

கோத்தகிரியில் விபத்தில் சிக்கிய மினி வேன் – சிறுவன் உயிரிழப்பு, 31 பேர் காயம்

கோத்தகிரி: கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கிய மினி வேனில் பயணித்த ஓட்டுநர் உட்பட 31 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்களில் 7 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பவானிசாகர் அணைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் முதற்கட்டமாக … Read more

“இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றி இருக்கிறது திரிணமூல் காங்.” – பிரதமர் மோடி சாடல்

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் நிலை குடிமக்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தின் பர்தமான் – துர்காபூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பிரதமர் மோடி பேசியது: “திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மேடைப் பேச்சின்போது இந்துக்களை கடுமையாக சாடியுள்ளார். ‘இந்துக்களை 2 மணி நேரத்தில் பகீரதி ஆற்றில் தூக்கி வீசுவோம்’ எனக் … Read more

மொரிசியஸ் நாட்டில் இளையராஜா உடன் கூட்டு சேர்ந்த யுவன் சங்கர் ராஜா

இசை உரிமை யாருக்கு சொந்தம்… காசு கொடுக்காமல் காபிபேஸ்ட்… பாட்டா – மெட்டா… என்று இளையராஜா-வை வைத்து அனல் பறந்து கொண்டிருக்க இளையராஜாவோ மொரிசியஸ் கடற்கரையில் குளுகுளுவென காற்றுவாங்கிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று பதிவிட்ட இசைஞானி இளையராஜா தான் மொரிசியஸ் நாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். Yuvan came to Mauritius pic.twitter.com/3XDBQAa8wG — Ilaiyaraaja (@ilaiyaraaja) May 3, 2024 இதனைத் தொடர்ந்து இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது … Read more

Anniyan: விக்ரம் ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்.. ரீ ரிலீஸ் ஆகும் அந்நியன்.. எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன் படம். ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி இருந்த இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் தற்போது

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் முன்னெடுப்பு

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் (ISTRM) அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் கருத்தறியும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை தயாரிப்பதற்கான செயன்முறைக்கு பொதுமக்களின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், அதிகாரிகள், மகா சங்கத்தினர், அனுராதபுரம் மறை மாவட்ட பேராயர் மாஷல் அந்தாதி, அனுராதபுரம் முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி அப்துல் … Read more

மீன்பிடி தடைக்கால உதவித் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்துக: புதுச்சேரி அதிமுக மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாகவும், மழைக்கால உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது. புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மீன்பிடி தடைக்காலம், பெருமழைக்காலத்தில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இவ்விரு திட்டங்களில் மீனவர்களுக்கு … Read more

ஆபாச வீடியோ சர்ச்சை: எச்.டி.ரேவண்ணா மீது 2-வது எஃப்ஐஆர் பதிவு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் ரேவண்ணா மீது இந்த இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 376(2)(N), 506, 354A(1), … Read more