China: “எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆண்டு முடிவு போனஸாக அதன் ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன். ஊழியர்கள் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. Henan Mining Crane Co. Ltd என்ற நிறுவனம் ஒரு நீளமான டேபிளில் மொத்தமாக பணத்தை நிரப்பி, 15 நிமிடங்கள் ஊழியர்களுக்கு நேரம் கொடுத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் … Read more

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகி உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பொது வெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், இச் சம்பவம் குறித்து விசாரணை செய்து, சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் … Read more

மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இங்கு மவுனி அமாவாசை (தை அமாவாசை) நாளான கடந்த 29-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்து குறித்து … Read more

வாஷிங்டன் அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதி விபத்து – என்ன நடந்தது?

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி ஆற்றில் விழுந்தன. மீட்பு பணியில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் ஏர்லென்ஸ் நிறுவனத்தில் குறைந்தளவிலான பயணிகள் ஏற்றிச் செல்ல கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் கனட்ஏர் ரீஜினல் ஜெட் 700 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 78 பேர் பயணம் செய்யலாம். இந்த ரக விமானம் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் விச்சிட்டா நகரில் இருந்து 60 பயணிகள் மற்றும் 4 … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் – அரிசிக்கு பதிலாக இந்த பொருள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்

Ration Card | ரேஷன் கடைகளில் அரசிக்கு பதிலாக சிறுதானியம் ஒன்றை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று  நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நாளை பட்ஜெட் தாக்கல்

டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நாளை 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வஇதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் … Read more

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு உத்தரவு

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கைத்தறி, துணி நூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாக உள்ளது. தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 150 இடங்களில் இதன் விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு தொழில்நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறது. கடைசியாக, கடந்த 2018-ம் ஆண்டில் ஊதிய உயர்வு … Read more

வக்பு திருத்த மசோதா அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஆராய்ந்து வந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று வழங்கியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் முடிந்த நிலையில் இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கைக்கு 15-11 என்ற வாக்குகள் … Read more

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் விடுதலை செய்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏராளமானோரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதையடுத்து, இஸ்ரேல் காசாவில் நடத்திய பதிலடி தாக்குதலில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more