யமுனையை சுத்தப்படுத்த முடியாதபோது… அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார் – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டால், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன். குடிக்க கூடிய நீராக மாற்றுவேன் என கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அதன்படி செய்ய முடியாதபோது, அரியானா மக்கள் விஷம் கலந்து விட்டனர் என கூறுகிறார். டெல்லி மக்களை விஷம் குடிக்க செய்ய … Read more

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக சதம்.. 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஜோஷ் இங்லிஸ்

காலே , இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஜோஷ் இங்லிஸ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் … Read more

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவில் 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜுமா. இவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதவியில் இருந்து விலகும்படி அவருக்கு அழுத்தம் தரப்பட்டது. 2021-ம் ஆண்டு ஊழல் விசாரணைக்கு ஆஜராகும்படி ஜேக்கப்புக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்ததும், கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். கடைகளை சூறையாடினர். கட்டிடங்கள், வீடுகளுக்கு தீ வைத்து சொத்துகளை சேதப்படுத்தினர். … Read more

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூர்: பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர், தனது சக மருத்துவருடன் 2022 மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து, ஆட்டோவில் வேலூருக்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் பாலாற்றங்கரைக்கு கடத்திச் சென்று, … Read more

சவுதி அரேபிய விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததாக ஜெட்டாவில் இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது. சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தங்கள் ஆதரவை அளிப்பதாகவும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் … Read more

தமிழக அரசு சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு ரூ.11.63 கோடி ஒதுக்கீடு

சென்னை தமிழக அர்சு சென்னை ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூப் 11.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880-ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்.எஸ்.ஆர்.எம்.) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் … Read more

அசாமில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

திஷ்பூர், அசாமில் உள்ள கச்சார் மாவட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சில்கார் ஐஸ்வால் பைபாஸ் சாலையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 9 கோடி மதிப்புள்ள யாபா மாத்திரைகளை போலீசார் கையகப்படுத்தினர். இதில் மொத்தம் 30 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த மாத்திரைகளில் மெத்தபெட்டமைன் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து … Read more

உத்தரபிரதேசம்: மொராதாபாத் டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

லக்னோ, இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட முகமது சிராஜுக்குப் பிறகு, இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார். View this post on Instagram A post shared by Deepti Sharma (DS) (@officialdeeptisharma) தினத்தந்தி Related Tags : Deepti Sharma  … Read more

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை- கனடா விசாரணை ஆணையம் அறிக்கை

ஒட்டாவா, கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்கக் கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை … Read more

கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ – ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு… கதறித் துடித்த பெண்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடு கட்டியும், முந்திரி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் அமையவிருக்கும் தோல் தொழிற்சாலைக்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். அதற்காக `ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்’ என்று அந்த விவசாயிகளுக்கு கடந்த மாதம் … Read more