பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக கேரளாவில் வெள்ளிக்கிழமை போராட்டம்

குமுளி: பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேரள மாநிலம் குமுளியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு அணை குறித்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்பினர் அணையின் பலம் குறித்த சர்ச்சை மனுக்களை அடிக்கடி தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 28-ம் தேதி இந்த மனுக்கள் குறித்த விசாரணையில் நீதிபதி ரிஷிகேஷ்ராய் கூறுகையில், அணை கட்டி 130 … Read more

ரூ.200-க்காக ஒருவர் அடித்துக் கொலை: உ.பி.யில் துக்கம் தாளாமல் தந்தை மரணம்

உ.பி.யில் ரூ.200-க்காக 40 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த துக்கம் தாளாமல் அவரது 70 வயது தந்தை உயிரிழந்தார். உ.பி.யின் மீரட் மாவட்டம், பவன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் ஹோஷியார் சிங் வால்மீகி. கூலித் தொழிலாளியான இவர் அருகில் வசிக்கும் விகாஸ் குமார் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கியிருந்தார். இதில் ரூ.300-ஐ திருப்பிக் கொடுத்த ஹோஷியார் சிங் ரூ.200-ஐ திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி … Read more

ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? – அதில் இணைவது ஏன் கடினம்?

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அமெரிக்க சினிமாட்டோகிராப்பர் சொசைட்டி (ASC) என்ற உலகப் புகழ்பெற்ற சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். இந்த நிகழ்வைத் தற்போது அவர் பணியாற்றிவரும் லவ் இன்சூரன்ஸ் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஒளிப்பதிவாளர்களுக்கு ASC-யில் இணைவது கனவாக இருக்கும். ASC ஓப்பன்ஹெய்மெர் பட ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோய்டெமா, எல்விஸ் பட ஒதிப்பதிவாளர் மேண்டி வால்கர், டூன், பேட் மேன் படங்களின் ஒளிப்பதிவாளர் கிரேக் ஃப்ரேசர் உள்ளிட்ட … Read more

இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவள்ளூர் இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமால் கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.  இங்கு நடைபெறும்  தேரோஒட்ட உற்சவத்துக்கு ஊள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் பெருவாரியாக வருவது வழக்கமாகும்/ அவ்வகையில்திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.  அப்போது திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளிய நிலையில் தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. இந்நிகழ்வில் திருவள்ளூர், காஞ்சிபுரம், … Read more

உத்தர பிரதேசத்தில் கார் மோதி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

லக்னோ, உத்தர பிரதேசம் நொய்டா அருகில் உள்ள நல்கர்ஹா கிராமத்தை சேர்ந்தவர் சோகேஷ். இவருடைய மகன் ஆருஷ்(வயது 15). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள செக்டர்-145 மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் இன்று மாலை நேரத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஆருஷ் மீது மோதியது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உயிரிழந்த சிறுவனின் தந்தை சோமேஷ் ஜீப்பின் எண்ணை போலீசாரிடன் … Read more

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த ஐ.பி.எல். தொடரில் 5 … Read more

போர் நிறுத்த ஒப்பந்தம்; இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை பெர்ஜர் இன்று விடுவிப்பு

கான் யூனிஸ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா … Read more

'சீமான் சொன்னதை நம்பி ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம்' – கொளத்தூர் மணி வேதனை

திராவிடர் விடுதலை கழகம்  தலைவர் கொளத்தூர் மணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஈழப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியபோது, அந்த போராளி குழுக்களுக்கு தமிழகத்தில் ஆயுதப் பயிற்சி நடைபெற்றது. கொளத்தூர் மணி அந்தப் பயிற்சிகளை திராவிட இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்தனர். காயமடைத்த புலிகளின் சிகிச்சைக்கான உதவி, ஆயுதம் அனுப்பியது வரை திராவிட இயக்கங்களின் பங்கு உள்ளது. புலிகளுடன் இருந்ததை திராவிட இயக்கத்தினர் யாரும் விளம்பரபடுத்தவில்லை. சீமானுக்கு அரசியல் பொருளாதாரக் காரணமாக இருக்கலாம். பெரியார் … Read more

“பேரவை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து ஆகவில்லை, மாறாக…” – மதுரையில் அண்ணாமலை பேச்சு

மதுரை: “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் டங்ஸ்டன் திட்ட ரத்து பாராட்டு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “பிரதமர் மோடி தமிழகத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் எப்போதும் கொண்டு வரமாட்டார். அது அவர் ரத்தத்திலேயே இல்லை. தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு … Read more

வக்பு மசோதா அறிக்கை சபாநாயகரிடம் இன்று ஒப்படைப்பு: முறைப்படி ஜேபிசி ஒப்புதல் வழங்கியது

திருத்தப்பட்ட வக்பு மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு … Read more