காட்பாடி: 7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, … Read more

மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லா, ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டி பதவியேற்பு

புதுடெல்லி: மணிப்பூர் ஆளுநராக அஜய் குமார் பல்லாவும், ஒடிசா ஆளுநராக ஹரி பாபு கம்பம்பட்டியும் இன்று (ஜன. 03) பதவியேற்றுக்கொண்டனர். அஜய் குமார் பல்லா பதவியேற்பு: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிப்பூரின் 19வது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா பதவியேற்றார். அவருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் பவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பை அடுத்து, மணிப்பூர் ரைபிள்ஸ் வீரர்களின் அணிவகுப்பு … Read more

கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..

First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?  

விமானப்பணிப்பெண்; செளந்தர்யாவின் ரசிகை; மகனின் சினிமா ஆசை – நடிகை சுவாதி பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை சுவாதி. ”என்னோட ஆசை, லட்சியம் எல்லாமே படிச்சு முடிச்சிட்டு ஒரு விமானப் பணிப்பெண்ணா ஆகணும்கிறதுதான். ஆனா, நான் பத்தாவது படிச்சிட்டிருந்தப்போ எதிர்பாராத விதமா தமிழ் சினிமாவுல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. படிப்பை விடமுடியாதுன்னு தீர்மானமா இருந்ததால, சம்மர் ஹாலிடேஸ்ல அந்தப்படம் நடிச்சுக் … Read more

Jio Vs Airtel… ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுடன் OTT பலன்கள் கொடுக்கும் திட்டம் எது?

வாடிக்கையாளர்கள் தேவையை கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், வருடத்திற்கான ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.  ஏர்டெல்   அல்லது ஜியோவின் ஒரு ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டத்தை பெற நினைப்பவர்களுக்கு, இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவை தவிர்க்க விரும்பினால், வருடாந்திர திட்டத்தை நீங்கள் எடுக்கலாம். ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் தங்கள் … Read more

8 பேரை பலி கொண்ட இந்தோனேசிய படகு விபத்து

செரம் பாகியம் இந்தோனேசிய நாட்டில் ஒரு படகு கவிழ்ந்ததில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர் மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா, ” உள்ளூர் நேரப்படி காலை … Read more

நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா… தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!

நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் . மஞ்சூர் ஐயப்பன் கோயில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து … Read more

‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ – முத்தரசன் கண்டனம்

சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி … Read more

“எனக்காக ஒரு மாளிகையை கட்டியிருக்கலாம்; ஆனால்…” – புதிய வீடுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பேச்சு

புதுடெல்லி: நானும் எனக்காக ஒரு அரண்மனையை கட்டியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குதல், டெல்லியில் உலக வர்த்தக மையம் திறப்பு, வீர சாவர்க்கர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

2025ஐ சிறப்பாக தொடங்கி வைத்த மலையாள சினிமா! ஆரம்பமே அமர்க்களம் தான்!

சமீபத்தில் வெளியான ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள “IDENTITY” படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.