திண்டிவனம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் கட்டப்பட்டுள்ள ஏ.கோவிந்தசாமியின் நினைவகம் மற்றும் சமூக நீதிபோராளிகள் மணிமண்டபத்தை நாளை (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். இதையொட்டி இன்று (ஜன.27) மாலை சென்னையிலிருந்து காரில் வந்த முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். … Read more

‘பழங்குடியினருக்கு விலக்கு’ – உத்தராகண்ட்டில் அமலுக்கு வந்த பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?

டேராடூன்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தவிர மற்ற அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த … Read more

பும்ராவை பற்றி ஒரே நேரத்தில் வெளியான நல்ல செய்தி மற்றும் கெட்ட செய்தி!

இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு பும்ரா முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரின் துல்லியமான பவுலிங் பேட்ஸ்மேன்களை திணறடிக்க செய்து வருகிறது. பல போட்டிகளை தனி ஒருவராக அணிக்கு வென்று கொடுத்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து அசத்தினார். இந்நிலையில் பும்ராவை பற்றி நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் ஒரே சமயத்தில் வெளியாகி உள்ளது. நல்ல செய்தி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : தடய அறிவியல் உதவி இயக்குனரை விசாரிக்க தடை

சென்னை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைசர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தடய அறிவியல் உதவி இயக்குநரை விசாரிக்க தடை விதித்துள்ளது. முந்தைய அதிமுக அட்சியில் கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்திருந் வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு … Read more

பள்ளியை தொடர்ந்து மும்பையில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை, கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையின் கண்டிவலி மேற்கில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அந்த கல்லூரிக்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்லூரியில் மேற்கொண்ட சோதனையில் தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் … Read more

ஆர்ச்சர் பந்துவீச்சை குறிவைத்து அடித்தது ஏன்..? திலக் வர்மா விளக்கம்

சென்னை, இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் … Read more

கவர்ச்சியான மனைவியின் புகைப்படங்களால் போலீசில் சிக்கிய போதை பொருள் கும்பல் தலைவன்

லண்டன், அமெரிக்காவில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வருபவர் லூயிஸ் கிரிஜல்பா (வயது 43). இவருடைய மனைவி எஸ்தபானியா மெக்டொனால்டு ரோட்ரிகீஸ். போலீசாரால் தேடப்படும் நபராக லூயிஸ் உள்ளார். இவருக்கு எதிராக, கோஸ்டா ரிக்காவில் இருந்து கொக்கைன் என்ற போதை பொருளை ஏற்றுமதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக, அவரை கைது செய்ய அமெரிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், மனைவி எஸ்தபானியாவுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் … Read more

Shan Masood: “உங்கள் கேள்வியில் மரியாதை இல்லை" – செய்தியாளரிடம் கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் அபார வெற்றிபெற்று, தொடரை சமன் செய்திருக்கிறது. முதல் டெஸ்டில், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களுக்குள் சுருட்டி, 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு … Read more

“வேங்கைவயல் விவகாரத்தில் மறைக்க ஏதுமில்லை எனில்…” – தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

சென்னை: “வேங்கைவயல் விவகாரத்தில் மறைப்பதற்கு எதவும் இல்லை. யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியல் இல்லை என தமிழக அரசு கருதுமேயானால் இவ்வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து, இரண்டு வருடங்கள் நிறைவுற்று விட்டன. இச்சம்பவத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more