சொதப்பும் இந்திய அணி.. டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ்.. கேப்டனாக நீடிப்பாரா?

SuryaKumar Yadav: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகின்றது.  இந்திய அணி இன்று நடைபெற்று வரும் 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைபற்றி விடும். இந்த சூழலில் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து கேள்விகள் … Read more

'சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமாக இருக்கிறது' – ஜிஎஸ்டி குறித்து விஷால்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு  நடிகர் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். நாளை நடக்கும் மத்திய பட்ஜெட்டில் சினிமா துறையின் எதிர்பார்ப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த விஷால்,  “திரைத்துறையையும், சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, இது வருத்தமாக உள்ளது. அதனை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டி, 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் விதிக்கப்படுகிறது. விஷால் மத்திய … Read more

மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

டெல்லி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உண்மையான பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்பாததற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் ர் தொடங்குவது வழக்கமாகும்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார் இன்றைய  கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றிய பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. 011இந்தியா முழுவதும் … Read more

`எம் புள்ளைகளுக்காக எடுத்த முடிவு' – நீலகிரியின் முதல் பெண் நடத்துநர் சுகன்யா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சுகன்யாவின் கணவர் கருப்பசாமி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த ஊதியத்தின் மூலமே குடும்பத்தைப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் இழப்பால் குடும்பமே நிலைகுலைந்து தவித்திருக்கிறது. சுகன்யா இரண்டு பெண் குழந்தைகளையும் எப்படியாவது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டிய … Read more

‘அச்சம் தரும் சீமான் பேச்சு’ – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்

சென்னை: நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதில், “நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதிய 5 பக்க கடிதத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “சமீபகாலமாக நீங்கள் நேர்காணல்களிலும் மேடை பேச்சுகளிலும் உங்கள் பேச்சு கட்சியின் நோக்கத்தில் இருந்து விலகி, … Read more

“பாவம்… அவர் சோர்வடைந்து விட்டார்!” – குடியரசுத் தலைவர் உரை மீதான சோனியா காந்தி கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாவம்… எளிய பெண் மிகவும் சோர்வாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை இழிவானது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான … Read more

சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம்: "மும்பை போலீஸின் அறிக்கை தவறானது".. பரபரப்பு தகவல்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் கத்திகுத்து விவகாரத்தில், சிசிடிவி காட்சியில் உள்ள நபருடன் கைது செய்யப்பட்டவரின் முகம் பொருந்துவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.   

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது!

Sachin Tendulkar to get lifetime achivement award: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க உள்ளது. இந்த விருது நாளை நடைபெறும் பிசிசிஐ-யின் வருடாந்திர விழாவில் டெண்டுல்கருக்கு வழங்கப்படுகிறது. பிசிசிஐ-யின் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் கேப்டன் … Read more

Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி' – சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் – ஒரு பார்வை

சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்திற்கு `பராசக்தி’ என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான `டான் பிக்சர்ஸ்’ . படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத களத்தில் வில்லனாக ரவி மோகன் களமிறங்கியிருக்கிறார். அதர்வாவும் டோலிவுட் நடிகை ஶ்ரீலீலாவும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் ரெட்டோ டைட்டிலில் நடிப்பது இது 6-வது முறை. தன்னுடைய கரியரில் பழைய படங்களின் தலைப்பை மீண்டும் தனது படங்களுக்கு வைத்திருக்கிறார் சி.கா! … Read more

பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல செய்த நிதி அமைச்சர்

டெல்லி இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பொ0ருளாதார ஆய்வறிக்கையை  தாக்கல் செய்துள்ளார்/ ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் ர் தொடங்குவது வழக்கமாகும்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இன்றைய  கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் 1 மணி நேரம் உரையாற்றிய பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. 011இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை … Read more