மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்புகள்: பிரயாக்ராஜில் நீதி விசாரணைக் குழு ஆய்வு
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதி விசாரணை ஆணையம் வெள்ளிக்கிழமை பிரயாக்ராஜ் சென்று ஆய்வைத் தொடங்கியது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவில், முன்னாள் காவல் துறை இயக்குநர் (டிஜிபி) வி.கே.குப்தா மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் … Read more