Maragatha Nanayam 2 : மீண்டும் இணையும் ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி?

நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, முணீஷ்காந்த், ஆனந்த் ராஜ், டேனியல் ஆண்டனி, மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் மரகத நாணயம். 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தமிழ் ஹாரர் காமெடி படங்களில் தனித்துவமாக நின்று, இன்றளவும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது. மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நடிகர் ஆதி, ஏ.ஆர்.கே … Read more

இன்று அதிகாலை  நேபாளத்தில் நில நடுக்கம்

காத்மண்டு இன்று அதிகாலை 2.36 மணி அளவில் நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று அதிகாலையில் நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை  2.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இதுவரை இந்த … Read more

நிர்பயா நிதியில் தேசிய கல்விக் கொள்கை அம்சத்தை செயல்படுத்தும் சென்னை மாநகராட்சி? வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் தேசிய கல்விக் கொள்கை விவகாரம் பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. அதில், “மாநில ஆளுங்கட்சி தி.மு.க, மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என்று திரித்து அரசியலைப் புகுத்தி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாறுகிறது. இதை ஏற்கவில்லையென்றால் கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை” என்று மத்திய பா.ஜ.க அரசு அதிகாரத் தொனியில் கூறிவருகிறது. அதற்கு, “தேசிய கல்விக் கொள்கைக்கும் கல்வி நிதி ஒதுக்குவதற்கும் சம்மந்தமில்லை. மாணவர்களின் வாழ்க்கையில் … Read more

தினசரி பால் கொள்முதல் அளவை அதிகாரிகள் உயர்த்த வேண்டும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

சென்னை: தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆவின் பொது மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாரியாக, … Read more

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வக்பு மசோதா திருத்தங்களுக்கு ஒப்புதல்

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவில், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த 23 மாற்றங்களில் 14 மாற்றங்களை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் உள்ள முஸ்லிம் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில வக்பு வாரியங்கள் முடிவெடுக்கின்றன. இதில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரவும், வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்தவும், துஷ்பிரயோகத்தை தவிர்க்கவும், வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்களை கொண்டு வந்து மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு கடந்த … Read more

நடிகர் விஜய் பாஜகவுடன் கள்ள உறவில் இருக்கிறார் – விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு!

பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது பாஜகவுடன் அவர் கள்ள உறவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பேசியுள்ளார்.

IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது, இதுவரை ஐபிஎல்-ல் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த … Read more

Kingston: `ஜி.வி.பிரகாஷை நடிக்க வேண்டாம்னு சொன்னேன்; அவர் நடிக்க இதுதான் காரணம்..!' – வெற்றிமாறன்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட … Read more

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே அனுமன் தனது கதையினால் ராமநாமம் சொல்லி ஒரு பாறையில் அடித்தார். அந்த பாறை வழியாக ஆகாய கங்கை பெருகி வந்தது. அதுவே அனுமன் நதியானது. தற்போது இந்த கோயிலின் எதிரே கோடையிலும் வற்றாத திருக்குளம் இருக்கிறது. கோயிலும், குளமும் ஒருங்கே அமைந்த கோயில்கள் வரிசையில் இலத்தூரும் இருப்பது குறிப்பிடத் … Read more

மார்ச் 6-ல் கோட்டை நோக்கி பேரணி: போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மார்ச் 6-ல் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில், ”ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், அடுத்த மாதம் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு … Read more