“என் வாழ்க்கையில் சிறந்த முடிவு'' – அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தொழிலதிபர் சொல்வதென்ன?

இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது. அப்படி சென்றவர்கள் சிலர் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். சிலர் சிறிது காலம் இந்தியா வந்து செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தற்போது வளமான நாடுகளாகவும் வெளிநாட்டவருக்கு தொழில் மையமாகவும் இருக்கின்றன. என்றாலும் அதிலும் பல அரசியல் மற்றும் கலாசார சவால்களை அவர்கள் எதிர்கொண்ட வண்ணம் தான் உள்ளனர். உதாரணமாக, சமீபத்தில் அமெரிக்கா உரிய ஆவணம் இல்லாமல் குடியேறிய அயல்நாட்டைச் சேர்ந்தவர்களை … Read more

மும்மொழி கொள்கையை கண்டித்து அரசுப் பள்ளி அலுவலக ஊழியர் ராஜினாமா கடிதம்

கரூர்: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுப் பள்ளி இளநிலை உதவியாளர் கடிதம் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிபவர் கா.சிவா (42). ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியர் (பொ) ஆண்டவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதைக் … Read more

போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை: பஞ்சாபில் 5 அமைச்சர்கள் குழு அமைப்பு

பஞ்சாபில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல் துறை மற்றும் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அமன் அரோரா, சுகாதார அமைச்சர் பல்பீர் சிங், … Read more

2-ம் கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்

கான் யூனிஸ்: இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று அனுப்பினர். … Read more

Dragon: `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்!' – `டிராகன்' பட வெற்றியைக் கொண்டாடிய `LIK' குழுவினர்!

`டிராகன்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது. `லவ் டுடே’ படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். `டிராகன்’ திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ படமும் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன் உள்பட இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் `டிராகன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார்கள். View this post on … Read more

விலங்குகள் மற்றும் பறவைகளை வீடுகளில் வளர்க்க கட்டணம் : மதுரை மக்கள் அதிர்ச்சி

மதுரை மதுரை மக்கள் வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்க கட்டணாம் விதிக்கப்படும் எனும்  தீர்மானத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே வீடுகளில் பறவைகள் மற்றும் செல்லப்பிரானிகள் வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  இன்றைய கூட்டத்தில் கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- அதன்படி மாடு வளர்க்க ரூ.500 கட்டணமும், குதிரை வளர்க்க ரூ.750 கட்டணமும், ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  … Read more

மாசி மகம்: புதுவை, காரைக்காலில் 13-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவை, புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம். ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு மாசி … Read more

புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம் அணியை எதிர்த்து மோதுவதாக இருந்தது. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து … Read more

பிலிப்பைன்ஸ்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து- 8 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் … Read more