தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் – 41 புதிய திட்டங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 2025 – 2026 நிதியாண்டுக்கான ரூ.7.45 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று (பிப்.27) தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2025- 2026 நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது: … Read more

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவி: அவசர விசா வழங்க எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை

புதுடெல்லி: அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி கோமாவில் இருக்கும் மகளைப் பார்க்க தனக்கு அமெரிக்கா செல்ல அவசர விசா வழங்க வேண்டும் என்று மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவருக்கு உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீலம் ஷிண்டே. இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தங்கிப் படித்து வருகிறார். பிப்.14-ம் தேதி அங்கு நடந்த விபத்தில் சிக்கிய நீலம் தற்போது கோமாவில் உள்ளார். அவர் மீது … Read more

சாம்சங் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாசங் கேலக்சி எம்16 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் … Read more

Trisha: “VTV இதயத்துக்கு நெருக்கமான படம்.." – 15 ஆண்டுகள் நிறைவு; வெற்றிக்கு த்ரிஷா சொன்ன காரணம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகான பாடல்களுடன் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் மனதை வென்றது. இன்றளவும் காதலர்களின் முதன்மை திரைப்பட தேர்வாக இருக்கிறது. அதுவும், திரையரங்குகளில்!  ரஜினியின் `சந்திரமுகி’ சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா’ படமும் படைத்திருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி – … Read more

சென்னை மாநகரட்சிக்கு ரூ. 1500 கோடி  கடன்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1500 கோடி கடன் உள்ளதாக  மேயர் பிரியா கூறி உள்ளார். இன்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா … Read more

தாயை திட்டியதால் ஆத்திரம்…மரக்கட்டையால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

நாக்பூர், மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கோந்தாலி நகரை சேர்ந்தவர் அன்ஷுல் என்ற கவுரவ் பாபராவ் ஜெய்ப்பூர்கர் (19). இவர் அப்பகுதியில் மோட்டார் மெக்கானிக்காக பணிப்புரிந்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் அன்ஷுல் மதிய உணவுக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அன்ஷுலில் தந்தை பாபராவ் மதுகர் ஜெய்ப்பூர்கருக்கும் (52) அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மதுகர் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்ஷுல் ஒரு மரக்கட்டையை எடுத்து தனது தந்தையின் … Read more

பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ராவல்பிண்டி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ராவல்பிண்டியில் … Read more

ஐநா மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் பற்றி பேசிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி

ஜெனிவா, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளது. எனினும், காஷ்மீர் பிரச்சினையில் தேவையின்றி மூக்கை பாகிஸ்தான் நுழைத்து வருகிறது. அதிலும் ஐநா போன்ற சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பும் பாகிஸ்தான் அதற்கான விலையையும் கொடுத்து வருகிறது. ஆனாலும் திருந்தியபாடில்லை. இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய … Read more

`அரசியல் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம்; அதில் குடும்பத்துக்கு தொடர்பு இல்லை' -ஆதவ் அர்ஜூனா மனைவி

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய விஷயம் இணையத்தில் தீயாய் பேசப்பட்டது. தற்போது ஆதவ் அர்ஜூனாவின் மனைவியான டெய்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரஸ்பரம் அவர்கள் எடுக்கும் சுயாதீனமான முடிவு குறித்தும், பர்சனல் மற்றும் வேலை சார்ந்த விஷயங்களை தனித்தனியாக வைத்திருப்பது குறித்தும் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். … Read more

கல்வி நிறுவனங்களின் சாதிப் பெயர்களை நீக்குவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா என்றும், சாதிப் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை சங்கங்களின் … Read more