திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் பைக் சாகசம்; இளைஞர் குறித்து போலீஸ் விசாரணை!

பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படி, ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது திருச்சி முன்னாள் எஸ்.பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்ததின் பேரில், சமீபகாலமாக பொது இடங்களில் இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்து ரீல்ஸ் வெளியிடுபவர்கள் பயந்து, பைக் சாகசத்தில் ஈடுபடுவதை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திருச்சி – … Read more

“வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது”  – சீமான் திட்டவட்டம்

ஓசூர்: “நடிகையின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக மாட்டேன்,” என்று ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகததால் அவரது வீட்டின் கதவில் போலீஸார் சம்மனை இன்று … Read more

“தோல்வி பயத்தால் மம்தா உளறுகிறார்” – ‘போலி வாக்காளர்கள்’ குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

கொல்கத்தா: மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை பாஜக சேர்ப்பதாக மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, தேர்தல் பயத்தால் அவர் உளறுவதாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுகந்த மஜும்தார், “மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தான் தோற்கப்போவதை மம்தா பானர்ஜி உணர்ந்துள்ளார். அதனால்தான் அவரது மனநிலை சீராக இல்லை. அவர் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார். போலி … Read more

“டிஜிட்டல் முறைக்கு மாறுவதில் ஊடகத் துறைக்கு உதவ அரசு தயார்” – அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: பாரம்பரிய முறையில் இருந்து டிஜிட்டலுக்கு ஊடகங்கள் மாற ஊடகத் துறைக்கு உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். Storyboard18-DNPA மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், “பாரம்பரிய ஊடகங்கள், புதிய யுக மாற்றத்துக்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இளைய தலைமுறையினர், பாரம்பரிய ஊடகங்களிலிருந்து டிஜிட்டல் ஊடகங்களுக்கு முற்றிலுமாக மாறிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு பாரம்பரிய ஊடகங்கள், டிஜிட்டலுக்கு மாறும்போது … Read more

பிரபுதேவாவின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கும் அவரது மகன்! வைரலாகும் போட்டோ..

Prabhu Deva Introduced His Son : நடிகர் பிரபுதேவா, தனது மகனுடன் முதன்முதலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டார். இது, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.  

Kingston: “ 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில ஜி.வி சாரோட ரசிகனாகிட்டேன்" – அஸ்வத் மாரிமுத்து

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட … Read more

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

சென்னை ஓடிடியில் இந்தவாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ ஒவ்வொரு வாரமும் திரையறங்குகளில் பல புதிய படங்கள் ரிலீசாகி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன., இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள … Read more

தொகுதி மறுசீரமைப்பு: மாநில அரசின் அச்சமும் மத்திய அரசின் முடிவும்; உங்கள் கருத்து? – #கருத்துக்களம்

தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ‘மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. `நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்’ இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை … Read more

“நிதி தரவில்லை என புலம்புவதைவிட வரி செலுத்தமாட்டோம் எனக் கூற வேண்டும்” – சீமான் பேச்சு

ஓசூர்: “நிதி தர மறுக்கும் மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓசூரில் பேசினார். ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை தமிழகத்துக்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியனவற்றைக் கண்டித்து நாம்தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். … Read more

‘தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்’ – மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா: “மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளிமாநில வாக்காளர்களை பாஜக சேர்க்கிறது. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்” என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. … Read more