12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை குறித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை காரணமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. ஆனால் காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிகம் பதிவாகி வருகிறது. அதே வேளையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

Racist எனக் கூறினால் Trump எனப் பதிவாகும் சர்ச்சை; ஆப்பிள் நிறுவனத்தின் விளக்கம் என்ன?!

சமூக ஊடகங்களில் சில ஐபோன் பயனர்கள், “இனவெறி” என்ற  வார்த்தையைச் சொல்லும்போது, அது “ட்ரம்ப்” என எழுத்தில் மாறுவதை கவனித்துள்ளனர். இதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் தனது பேச்சு-உரை (dictation) கருவியில் ஏற்பட்ட இந்த தவற்றை சரிசெய்வதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சிக்கல், “r” என்ற எழுத்து உள்ள சொற்களை வேறுபடுத்துவதில் ஏற்பட்ட கோளாறினால் ஏற்பட்டதாக ஆப்பிள் விளக்கியுள்ளது. “நாங்கள் இந்தச் சிக்கலை கண்டறிந்துள்ளோம், அதற்கான தீர்வை வழங்கியுள்ளோம்” என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். டொனால்ட் … Read more

“இந்தி முகமூடியில் ஒளிந்திருக்கும் சமஸ்கிருத முகம்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: “சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன. அதனாலேயே நாம் இந்தித் திணிப்பை எதிர்கிறோம்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தி என்ற முகமூடிக்கு பின்னால் சமஸ்கிருதத்தின் முகம் இருப்பதாக விமர்சித்து மொழிப் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மூன்றாவது மடல் என்று குறிப்பிட்டு திமுகவின் அதிகாரபூர்வ … Read more

குடிபோதையில் மணமகளுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது

லக்னோ: குடிபோதையில் மணமகளுக்குப் பதிலாக மணமகளின் தோழனுக்கு மாலையை மணமகன் அணிவித்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அண்மையில் நடைபெற்ற திருமணம் தொடர்பான வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி. மாநிலம் கியோல்டியா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் இந்த திருமணம் கடந்த 22-ம் தேதி நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோவில், திருமணத்தின்போது மேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி … Read more

‘ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது’ – ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்

ஜெனிவா: தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் 58வது அமர்வில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஷித்திஜ் தியாகி பதில் அளித்தார். அவர் தனது பதிலில், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற மற்றும் … Read more

மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2ஆம் திருமணம்? அவரது மனைவி போட்ட பதிவு! என்ன சொன்னார்?

Madhampatty Rangaraj Wife Shruthi Recent Post : பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை பிரிய உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது மனைவி ஒரு செயலை செய்து இருக்கிறார்.  

இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..

ரேஷன் அட்டைதாரர்கள் e-KYC செய்யாவிட்டால், இலவச அரிசி கேன்சல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

D55 : `நற்றுணையாவதும் நமச்சிவாயமே..!’ – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ட்வீட்

கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் இந்தியளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுத்தந்தப் படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருந்த ராஜ்குமார் பெரியசாமி, “நான் நடிகர் தனுஷை முதல்முறை சந்திக்கும்போது என்னிடம் எந்தக் … Read more

புதிய போன் வாங்க திட்டமா… அசத்தலான 3 புதிய சாம்சங் போன்கள் சில நாட்களில் அறிமுகம்

ஸ்மார்போன்கள் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிப்போன நிலையில், போன் தயாரிப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர, அவ்வபோது புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில், சாம்சங் தனது 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் அடுத்த வாரம் சந்தையில் பார்க்கலாம். Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சாம்சங் மேற்கொண்டுள்ளது. சாம்சங் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் மார்ச் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. … Read more

‘கொலை மிரட்டல்கள்’ வருவதாகவும் சிஸ்டம் சரியில்லை என்றும் எலோன் மஸ்க் குமுறல்… பொதுவாழ்க்கையில் இது சகஜம் என்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க்-கும் கலந்துகொண்டார். ‘தாழ்மையான தொழில்நுட்ப ஆதரவாளன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மஸ்க், “அமெரிக்க அரசின் சிஸ்டம் சரியில்லை, அவை மிகவும் பழமையானவை இதில் பல செயலிழந்துள்ளது. அமைப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. மென்பொருள் வேலை செய்யாது. அரசாங்க கணினி அமைப்புகளை சரிசெய்ய DOGE உதவுகிறது. இருந்தபோதும் உண்மையில் இது தொழில்நுட்ப … Read more