இன்று அதிகாலை அசாமில் நில நடுக்கம்

மோரிகான் இன்று அதிகாலை  அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை 6.10 மணிக்கு ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை போல் அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் ஆய்வு மையம் இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை … Read more

தனியார் மூலம் மாநகர பேருந்து இயக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்​தினர் ஆர்ப்​பாட்டம்

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 600 பேருந்துகளை வாங்கி தனியார் மூலம் இயக்க அரசு … Read more

கர்நாடக உயர் நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து தர்காவுக்குள் இந்து அமைப்பினர் சிவலிங்க பூஜை

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள தர்காவுக்குள் சிவலிங்க பூஜை செய்ய அம்மாநில‌ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இந்து அமைப்பினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டனர். கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. சூஃபி துறவி லட்லே மஷாக்கின் நினைவிடம் அமைந்துள்ள இந்த தர்காவில் இந்து துறவி ராகவ சைதன்யாவின் சமாதியும் அமைந்துள்ளது. இந்த சமாதியில் உள்ள சிவ‌லிங்கத்துக்கு இந்துக்கள் சிவராத்திரி … Read more

30% உயர்ந்த தனியார் பள்ளி கட்டணம்! ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் கைவிரிப்பு!

தனியார் பள்ளி கட்டணங்களை அரசு ஒழுங்குபடுத்த முடியாது என்றும், அதிக கட்டணத்தை தவிர்க்க அரசு பள்ளியில் பிள்ளைகளை சேருங்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Ind vs NZ: ரோஹித் சர்மாவிற்கு காயம்? மிகப்பெரிய சிக்கலில் இந்திய அணி!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் A வில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் Bயில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அரை இறுதிக்குச் செல்ல தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து … Read more

தமிழக்த்துக்கு மக்களவை தொகுதிகள் எதுவ்ம் குறையாது : அமித்ஷா உறுதி

கோவை தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதிகளில் எதுவும் குறையாது என அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இன்று கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மேலும் மாலை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். கோவை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, … Read more

பொய் பேசுவதை விஜய் தவிர்க்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

கோவை: மும்மொழி தொடர்பான விவகாரத்தில், மேடையில் பேசுவதை முதலில் விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எங்கள் கட்சிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு அநியாயம் … Read more

தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடையே போதுமானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி: தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிப்பதே போதுமானது என்றும் வாழ்நாள் தடை விதிப்பது கடுமையானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்” … Read more