யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கோவி.செழியன் வலியுறுத்தல்

மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தினார். யுஜிசி வரைவுக்கொள்கை தொடர்பான மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு பேசியதாவது: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகள் தொடர்பாக யுஜிசி … Read more

இந்து மதத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அறங்காவலர் குழு உத்தரவு

இந்துக்கள் அல்லாத, இந்து மதத்தை மதித்து நடக்காத 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிக்கொண்டே, இதர மதத்தை ஏற்று, இந்து மதத்திற்கு கேடு விளைவிக்கும் படியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு உத்தரவிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி, பிஆர் நாயுடு தலைமையில் முதன் முறையாக நடைபெற்ற தேவஸ்தான … Read more

தமிழகத்தில் இயல்பை விட அதிக  வெப்பம் நிலவும்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில இயல்வபை  விட அதிக வெப்பம் நிலவும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (05.02.2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஒரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. … Read more

சத்தீஷ்கார்: 5 பெண்கள் உள்பட 6 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தன்டேவாடா, சத்தீஷ்காரின் தன்டேவாடா மாவட்டத்தில் தெற்கு பஸ்தார் பகுதிக்கு உட்பட்ட மலங்கர் பகுதியை சேர்ந்த நக்சலைட்டுகள் 6 பேர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முன் இன்று சரணடைந்தனர். இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 5 பெண்கள் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்தனர். நக்சலைட்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடும்போது, சாலைகளில் குழிகளை தோண்டி போடுதல், பாதைகளை மறைக்கும் வகையில் மரங்களை வெட்டி, குறுக்கே … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

மும்பை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

ஈரான் என்ற நாடே இருக்காது… டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர், தாமஸ் குரூக் என்ற … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 72 சதவீத வாக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், நேற்று (5-ம் … Read more

டெல்லியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த … Read more

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பும், பாலஸ்தீனர்கள் எதிர்ப்பும் – பின்னணி என்ன?

‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது, காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தின் 34 பேர் உட்பட 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இந்த … Read more

ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது இந்தியா: ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கருத்து

சாட்ஜிபிடி-க்கு 2-வது பெரிய சந்தை இந்தியா என்றும் ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது என்றும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக்-ஆர்1 என்ற சாட்போட் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறுகிய காலத்தில் இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற சாட்போட் செயலிகளைப் போலவே செயல்படுகிறது. இது ஏஐ உலகில் மிகப்பெரிய … Read more