டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் … Read more

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய முயற்சி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலை தளத்தில், ”பன்முகத்தன்மை கொண்டு மக்கள் அமைதியாக வாழும் தமிழகத்தில், போலி மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக காலம் காலமாக மாமன் மச்சான் என்ற உறவின் முறை கொண்டு பழகி வரும் மக்களிடையே பழிகள், … Read more

சாலை தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த பஸ் – 50 பேர் காயம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அரிடதுபலம் பகுதியில் இன்று தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அரிடதுபலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. பின்னர், சாலை தடுப்பு சுவரில் மோதிய பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் 50 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள … Read more

சாம்பியன்ஸ் டிராபி; ரோகித்துக்கு இது கடைசி ஐ.சி.சி. தொடராக இருக்கலாம் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.16 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று … Read more

திருப்பரங்குன்றம் மலையை காக்க போராட்டம்: நீதிமன்றம் திடீர் அனுமதி; ஒரு மணி நேரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

மதுரை: ​திருப்​பரங்​குன்றம் கோயிலுக்​குள் தடையை மீறிப் போராட்​டத்​தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். இதற்​கிடை​யில், ஆர்ப்​பாட்டம் நடத்த நீதி​மன்றம் அனுமதி அளித்​த​தால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மலையைப் பாது​காக்க வலியுறுத்தி கோஷமெழுப்​பினர். போராட்​டத்​தையொட்டி மாவட்டம் முழு​வதும் 4 ஆயிரம் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். திருப்பரங்குன்றம் மலை மீதுகாசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சிலர் கந்தூரி கொடுக்க ஆடு, கோழிகளைப் பலியிட … Read more

25 ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று பேசினர். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று பேசியதாவது: நாடு … Read more

வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

ராமேஸ்வரம் வரும் 11  ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தற்போது  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலமாக அமைக்கப்பட்டு இந்த புதிய ரயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான … Read more

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஜனாதிபதியை காங்கிரஸ் அவமதித்துள்ளது – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை, நாட்டின் விடுதலைப் பாரதத்திற்கான உறுதியை வலுப்படுத்தும் என்றும், சாமானிய மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தொடர்ந்து மக்களிவையில் பேசிய பிரதமர் மோடி, “”நாம் 2025 இல் இருக்கிறோம். ஒரு வகையில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சதவீதம் கடந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளிலும் சுதந்திரத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை … Read more

இன்னும் 134 ரன்கள்… சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

புதுடெல்லி, இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு … Read more