வாக்காளர் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி

மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார். மதுரைக்கு நேற்று காலை விமானம் மூலம் வந்த ஞானேஸ்குமார், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற, 10 தொகுதிகளுக்கான தேர்தல் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் ஞானேஸ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் தேர்தல் பணி தொடர்பாக, தமிழக … Read more

மகா கும்பமேளா குறித்த மம்தாவின் கருத்து தவறு: பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி பதில்

கொல்கத்தா: மகா கும்பமேளா குறித்த மேற்கு வங்க முதல்வர் மம்தான பானர்ஜியின் கருத்து தவறானது என பாஜக தலைவரும், நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நிகழும் என்ற கருத்தில் உண்மையில்லை. எனக்கு தெரிந்தவரை புனித நீராடுவது என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. ஏனெனில் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கங்கா சாகர் மேளாவுக்கு ஏற்பாடு செய்கிறோம். அதனால்தான் புனித நீராடுதல் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது நடைபெறுவது மிருத்யு கும்பம். … Read more

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சிவராத்திரி வாழ்த்து

டெல்லி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இன்று இந்த வருடத்துக்கான சிவராத்திரி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது/ சிவராத்திரியை முன்னிட்டு  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளீட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ஹ்டுள்ளனர். அவ்வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு  எக்ஸ் தளத்தில், ”மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் … Read more

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் அலங்கார வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர் (சோமாஸ்கந்த மூர்த்தி), காமாட்சி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை தேரோட்டம் (போகி தேர்) நடைபெற்றது. பஜனை கோஷ்டியினர் சங்கீர்த்தனங்கள் பாட, கலைஞர்களின் உற்சாகமான கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நகர வீதிகளில் தேர் வலம் வந்தது. அதன்பிறகு உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்திக்கும், காமாட்சி … Read more

இப்ராகிம் ஜட்ரான் அபார சதம்… இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

தாய்லாந்து: பஸ் விபத்தில் சிக்கியதில் கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில் இன்று அதிகாலை இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று சாலையில் பயணித்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 49 பேர் கல்வி சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. மலையில் இருந்து உருண்டது. இந்த விபத்தில், 18 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு … Read more

ENGvAFG: `அந்தப் பசங்களுக்கு பயமில்ல' – கடைசிவரை சண்டை செய்த ஆப்கானிஸ்தான் வெளியேறிய இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் களமிறங்கின. அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக நெருக்கடி இரண்டு அணிகளுக்கும் உண்டானது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே வெறும் 37 ரன்களில் ஆப்கானிஸ்தானின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. ஆனால், அந்த நல்ல தொடக்கத்தை இங்கிலாந்து அணியால் கடைசிவரை கொண்டு செல்ல முடியவில்லை. இப்ராஹிம் சத்ரான் ஒப்பனராக இறங்கிய இப்ராஹிம் சத்ரான், 50-வது ஓவரின் … Read more

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அமித் ஷா விளக்கம் எழுப்பும் சந்தேகம்: ஆ.ராசா விவரிப்பு

சென்னை: “தொகுதி மறுசீரமைப்பில், தமிழகத்துக்கு குறையாமல் மற்ற மாநிலங்களுக்கு கூடினாலும் பிரச்சினைதானே” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி ஆ.ராசா சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், “விகிதாசாரம் எந்த அடிப்படையில் அமையும் என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாஜக செய்யும் அரசியல் என்பது தமிழகத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. அரசியல் நேர்மையற்றவர்கள் என்பதால் பாஜகவை நம்ப முடியாது” என்று அவர் கூறினார். இது குறித்து சென்னை – அண்ணா … Read more

பிஹாரில் பாஜக அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால் ராஜினாமா – பின்னணி என்ன?

பாட்னா: பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படும் நிலையில், பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும், பாஜகவின் மாநிலத் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால், கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை மேற்கோள் காட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நிதிஷ் குமார் அமைச்சரவை இன்று அல்லது நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. … Read more

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி வருவதால் திருவிழாக் காலங்களில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. வைகாசி புஷ்ப பல்லக்கு மற்றும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு வடபழனி கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதிக்கக் கோரி சங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2024 மே மாதம் அறநிலையத் துறையிடம் … Read more