ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!

சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்டு 407 மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருமயம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து இந்த வழக்கில் ஆர்.ஆர் குரூப்ஸ் குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், மினி லாரி உரிமையாளர் … Read more

சென்னையில் லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்

சென்னை: சென்னையில் ஒரு லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு இருப்பது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் சென்னை குழந்தைகளுக்கான பிரத்யேக புற்றுநோய் பதிவேடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. புற்றுநோய் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் மருத்துவர் ஆர்.சுவாமிநாதன், குழந்தைகள் புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் தரவுகளை சேகரித்தனர். … Read more

டெல்லி சட்டப்பேரவை, இடைத்தேர்தல் பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட தடை

புதுடெல்லி: டெல்லி சட்டப்​பேரவை மற்றும் இடைத்​தேர்தல் குறித்து தேர்​தலுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்புகளை காலை முதல் மாலை வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்​துள்ளது. டெல்​லி​யில் மொத்தம் உள்ள 70 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நாளை 5-ம் தேதி தேர்தல்நடைபெறுகிறது. மேலும், உத்தர பிரதேசத்​தில் மில்​கிபூர் மற்றும் தமிழகத்​தின் ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இடைத்​தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், நாளை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தேர்​தலுக்​குப் பிந்தைய கருத்​துக் கணிப்புகளை … Read more

காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீச்சு! குற்றவாளியை சுட்டுபிடித்த போலீசார் – பின்னணி என்ன?

Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ. 48.35 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு கிறித்துவ ஆதி திராவிடர்  மற்றும் பழங்குடியினரின் ரூ. 48.95 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1972-1973 ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான காலங்களில்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு  மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ; 2003-2004-ம் ஆண்டு முதல் 2009-2010-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை … Read more

Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்… தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பரிசளித்த த்ரிஷா!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டாவது எடிசன் நேற்று முன்தினம் மலேசியாவில் நடந்து முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி. இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருது பெற்றதுடன், தொடர் முழுக்க மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்ததால் தொடர்நாயகி விருதும் வென்றார் ஆல்ரவுண்டர் கொங்காடி த்ரிஷா. … Read more

ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில் சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேருக்கு ஜாமீன்

சென்னை: தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ மற்றும் வருமான வரித்துறை ஊழியர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்தி ரூ.20 லட்சம் வழி்ப்பறி செய்ததாக திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்ஐ ராஜாசிங், வருமான வரித்துறை ஊழியர்கள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு … Read more

சீனா இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவில் தயாரிப்போம் என்ற பெயரிலான மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் மோடி கொண்டு … Read more

Bottle Radha: ''எனக்கு கதை சொல்ல வரலைன்னு பா.ரஞ்சித் திட்டுவாரு!'' – இயக்குநர் தினகரன் சிவலிங்கம்

இன்று நம் சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னையை மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கிற `பாட்டல் ராதா’ திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். படம் தொடர்பாக அவரைச் சந்தித்துப் பேசினோம். ஸ்கிரிப்ட் எழுதிய பிறகு தனியாக டைரக்ஷன் பண்ணலாம்னு நினைச்ச தினகரனின் மனநிலை என்னவாக இருந்துச்சு? நான் `கபாலி’ படத்துல வேலை பார்க்கும்போது ஸ்கிரிப்ட் எதுவும் பண்ணல. எழுத முயற்சி பண்ணுவேன் அனா வராது. ஐடியாஸ் மாதிரி … Read more

டிரம்ப் நிர்வாக நடவடிக்கை… இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது…

கனடா, மெக்ஸிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான வரி விதிப்பை அமெரிக்க அரசு அதிகரித்துள்ளதை அடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 1 அமெரிக்க டாலருக்கு ரூ. 87.31 ஆக அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா வரை குறைந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. எனினும், டிரம்ப் நிர்வாகம் இந்தியா உடனான … Read more