விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் 13 பேர் கைது – மத்திய அரசு தகவல்

டெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துறை மந்திரி முரளிதர் பதில் அளித்துள்ளார். மாநிலங்களவையில் அவர் கூறியதாவது, 2024ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளன. இதில், 714 மிரட்டல்கள் உள்ளூர் விமானங்களுக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக இண்டிகோ விமானங்களுக்கு 216 … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது. அதன்படி, புவனேஸ்வரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது … Read more

மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி … Read more

`சீனா, OBC, வேலைவாய்ப்பின்மை, தேர்தல் ஆணையர் நியமன விதி, புத்தர்' – மக்களவையில் ராகுல் பேசியதென்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பான பட்ஜெட் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட பீகாருக்கு அள்ளிக்கொடுத்ததைத் தவிர வேறெதுவும் புதிதாக பட்ஜெட்டில் இல்லை என்றும் மாறி மாறி கூறிவருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் … Read more

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு: சென்னை, மன்னார்குடி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ சோதனை; 2 பேர் கைது

சென்னை: தடை செய்​யப்​பட்ட பயங்​கரவாத அமைப்​புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, மன்னார்​குடி உட்பட தமிழகத்​தில் 6 இடங்​களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்​தினர். இதில் 2 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன. இந்தியா​வில் ஹிஸ்ப்​-உத்​-தஹ்ரிர் என்ற பயங்​கரவாத அமைப்​புக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்​புக்கு ஆதரவாக சிலர் செயல்​பட்டு வருவ​தாக​வும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்த இயக்​கத்​தில் சேர்க்க முயற்சி நடந்து வருவ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. … Read more

குடியரசுத் தலைவர் மீது விமர்சனம்: சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

குடியரசுத் தலைவரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தாக கூறி பாஜக எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவந்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவரின் உரை குறித்து சோனியா காந்தியிடம் கருத்து கேட்டபோது” உரையின் இறுதியில் குடியரசுத் … Read more

வரும் 10 ஆம் தேதி அன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை வரும் 10 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியப்போது கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி கவர்னர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகிற 10 ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற … Read more

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கடந்த மாதம் 29ஆம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது , திடீரென நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேசம் மாநில அரசு தெரிவித்தது. மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. … Read more

சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம்… ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 248 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 150 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அபிஷேக் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த டிரம்ப் திட்டம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். உள்நாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அயல்நாடுகளுக்கும் நெருக்கடி அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாட்களிலேயே ரஷியாவுக்கு அவர் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். உக்ரைன் உடனான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என … Read more