சவுதி அரேபியாவில் இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை 2023-24-ல் 2 லட்சம் உயர்ந்தது

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2023-24) இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ல் 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்து, 26.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 10 சதவீத உயர்வு ஆகும். இதுபோல் நடப்பு நிதியாண்டிலும் … Read more

7 நாட்களுக்கான தமிழக வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்  9 ஆம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”03-02-2025 மற்றும் 04-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 05-02-2025 முதல் 09-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் … Read more

ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் விமர்சனம்

புதுடெல்லி, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்த நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மறுத்துள்ளார். இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பும்ரா விளையாடுவாரா…? – அஜித் அகர்கர் பதில்

புதுடெல்லி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த … Read more

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் … Read more

அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஊக்கத்தொகை, ஒரே விலை நிர்ணயம்: அமைச்சர் விளக்கம்

அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டிலிருந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தேவையைக் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட … Read more

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம்

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: நரேந்திர மோடி பிரதமராக உயர்ந்ததில் உத்தர பிரதேசத்தின் பங்கு உள்ளது. ஆனால் நிதியமைச்சரின் உரையில் உ.பி. பற்றி எதுவும் இல்லை. உ.பி. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அதுபற்றிய அறிவிப்பு இல்லை. உ.பி.யில் விவசாயிகளுக்கு இன்னும் சந்தைகள் இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி போன்ற குறுகிய கால நடவடிக்கைகள் வேலையின்மை நெருக்கடியைத் தீர்க்காது. பகுஜன் … Read more

பிப். 13-ல் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் சந்திப்பு: சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு

புதுடெல்லி: வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரத மர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். கடந்த 27-ம் தேதி இரு தலைவர்களும் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி … Read more

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி : அவசர வழக்ககா விசாரிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் இந்து முன்னணியின் ஆர்ப்பாட்ட அனுமதி கோரிக்கையை அவசர வாக்காக விசாரிக்க மறுத்துள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில்  ம்ற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. தர்கா நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டதால் திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் வந்தார். எம்பியுடன் வந்தவர்கள் அப்போது மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக … Read more