மராட்டியம்: மனைவியை பிரித்த சந்தேகத்தில் மாமியாரை தீ வைத்து எரித்த மருமகன் பலி

புனே, மராட்டியத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி அஷ்தாங்கர் (வயது 56). இவருடைய மாமியார் பாபி தாஜி உசாரே (வயது 72). கிருஷ்ண தாஜி டெம்போ ஓட்டுநராக பணி செய்து வந்திருக்கிறார். இவருடைய மனைவி 6 மாதங்களுக்கு முன்னர், கணவரை பிரிந்து சென்று விட்டார். போரிவலி பகுதியில் உள்ள நோயாளி ஒருவரை கவனித்து கொள்வதுடன் அவருடனேயே தங்கி விட்டார். மனைவி திரும்பி வராத சோகத்தில், டெம்போவிலேயே கிருஷ்ண தாஜி வசித்து வந்திருக்கிறார். அவருடைய மகன் … Read more

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும் – ஆஸி. முன்னாள் வீரர் கணிப்பு

மெல்போர்ன், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் தங்க அட்டை.. முதலீட்டாளர்களை ஈர்க்க டிரம்ப் புதிய திட்டம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க, முதலீட்டாளர் விசாவுக்கு பதிலாக தங்க அட்டை (கோல்டு கார்டு) வழங்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருவாயை அதிகரிக்கவும், நிதி பற்றாக்குறையை சரி செய்யவும் இந்த புதிய சலுகையினை அவர் அறிவித்து இருக்கிறார். … Read more

Odisha: அகழாய்வில் வெளிவந்த பிரமாண்ட புத்தர் சிலையின் தலைப்பகுதி… கவனம் பெறும் ரத்னகிரி!

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் 1.4 மீட்டர் உயர புத்தர் சிலையைக் கண்டுபிடித்துள்ளனர். நகைகளின் குன்று என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட ரத்னகிரியில் ஒரு மாபெரும் பௌத்த நிலையம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1905ஆம் ஆண்டே மன்மோகன் சக்ரவர்த்தி என்பவர் இதனைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் டிசம்பர் 1 அன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரத்னகிரி … Read more

“தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என வாங்கிய காசுக்கு கூவும் பிரசாந்த் கிஷோர்” – சீமான் சாடல்

வாணியம்பாடி: “தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள் கட்டமைப்பை மறுசீராய்வு செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று (பிப்.26) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், நாம் … Read more

‘இந்தி கற்பது புத்திசாலித்தனம்’ – தமிழக பொறியாளர்களுக்கு ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மொழி குறித்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால் கல்விக்கான நிதி மறுக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பின் மறு வடிவம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பா? … Read more

பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு

பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்தும் சிபிஎஸ்இயின் வரைவு பட்டியலில் பஞ்சாபி மொழி இடம்பெறாதது குறித்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பஞ்சாப் அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பஞ்சாபி மொழி ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். புதிய உத்தரவின்படி, பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி – PSEB), … Read more

மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு

ருத்ரபிரயாக், சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்துச் செல்கின்றனர். இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், வரும் மே மாதம் 2-ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோவில் குழுவின் தலைமை நிர்வாக … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்

லாகூர், 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா … Read more

அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம்.. உக்ரைன் அரசு ஒப்புதல்

வாஷிங்டன், உக்ரைன் – ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளை மறுநாள் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷியாவுடனான போரின்போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்களை … Read more