குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை பேச்சு: சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்கு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரின் உரை குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது சோனியாகாந்தி கூறுகையில், “ உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார். அவரால் பேச … Read more

அண்ணா பிறந்த தினத்தையொட்டி இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா பிறந்த தினத்தையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறை,, ”நாளை அதாவது 03.02.2025 அன்று காலை 08.00 மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள். இது … Read more

பணத்தாசை காட்டி 30 பெண்களை பலாத்காரம் செய்த மருந்துக்கடை உரிமையாளர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தவர் அம்ஜத். திருமணமான இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரது மருந்து கடைக்கு வரும் பெண்களை பணத்தாசை காட்டி, அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து தனது வலையில் விழ வைத்தார். பின்னர் அவர்களை தனக்கு சொந்தமான ஒரு வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்களை … Read more

உலகக்கோப்பை வென்ற ஜூனியர் மகளிர் அணிக்கு பரிசுத்தொகை அறிவித்தது பி.சி.சி.ஐ.

புதுடெல்லி, 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வந்தது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 20 ஓவர்கள் … Read more

கனடா நடவடிக்கையால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள் – பிரதமர் ட்ரூடோ

ஒட்டோவா, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து … Read more

Ola Roadster X launch date and details – பிப்ரவரி 5., ரோட்ஸ்டர் X பைக்கை வெளியிடும் ஓலா எலக்ட்ரிக்.!

₹ 79,999 விலையில் வரவிருக்கும் ஓலா ரோட்ஸ்டர் X பைக்கின் விற்பனை பிப்ரவரி 5, 2025 முதல் துவங்க உள்ளது.

ராயபுரம் – புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் சேவை: ஒரு சுற்று பயணத்தில் ரூ.25 லட்சம் வருவாய் கிடைக்கும்

சென்னை ராயபுரம் – புதுடெல்லி படேல் நகர் இடையே முதன்முறையாக சரக்கு ரயில் (பார்சல் கார்கோ விரைவு ரயில்) போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று பயணம் மூலமாக, குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, நவீன வசதிகள் கொண்ட சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தல், சரக்குகளை கையாள மேம்படுத்த … Read more

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் … Read more

டெல்லி மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க.வுக்கு தகுதியான வாய்ப்பு கிடைக்கவில்லை: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, டெல்லியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய அரசாங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார், இதுதொடர்பாக ராஜேந்திர நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய அவர், “டெல்லி இந்தியாவின் இதயங்களில் ஒன்றாகும், ஆனால் டெல்லியின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், கடந்த 25 ஆண்டுகளாக, இங்கே இருந்தது காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது ஆம் ஆத்மி அரசாங்கமோ தான். டெல்லிக்கு சேவை செய்ய தகுதியான வாய்ப்பு பாஜகவுக்கு கிடைக்கவில்லை. நாம் 21 ஆம் … Read more

சூறாவளியாக சுழன்ற அபிஷேக் சர்மா… ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகள்

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா … Read more