‘குடிசைகள் இடிக்கப்படாது; நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது’ – ஆம் ஆத்மிக்கு பிரதமர் பதிலடி

புதுடெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள குடிசை பகுதிகள் இடிக்கப்படாது, எந்த நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். டெல்லியில் உள்ள குடிசைப்பகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிசைகள் அழிக்கப்படும், நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியின் ஆர்.கே.புரத்தில் நடந்த பிரச்சார பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,” பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசியத் தலைநகரில் உள்ள குடிசைவாசிகளுக்கு … Read more

விரைவில் ரயில் பயணிகளுக்கான சிறப்பு செயலி அறிமுகம்

டெல்லி விரைவில் ரயில் பயணிகளுக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்வாரெயில் சூப்பர்ஆப்பை இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்த உள்ளது., இதில் டிக்கெட் முன்பதிவு, ரெயில் கண்காணிப்பு மற்றும் ரெயில்வே சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வாகும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் AI-இயங்கும் அம்சங்களுடன் பயனர்களின் வசதியை மேம்படுத்து உள்ளது என்னும் தகவலை ரயில்வே போக்குவரத்து செய்தி இணையதளமான ரயில்வே சப்ளை தெரிவித்துள்ளது , .இதில் பயணிகள் வசதியாக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு … Read more

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்' – இங்கிலாந்து Ex பிரதமர் முன்னிலையில் அதிரடி காட்டிய அபிஷேக்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 – 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் … Read more

திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடையை மீறி நடத்த இந்து முன்னணி உறுதி!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிப். 4-ல் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணியும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் … Read more

“டெல்லி குடிசைவாசிகளுக்கு பாஜக ரூ.3000 கொடுத்து தவறாக வழிநடத்த முயற்சி” – கேஜ்ரிவால்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இன்று டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் பலரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கட்சி (பாஜக) அங்கு வீடு வீடாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் ரூ.3000 பெற்றுக்கொள்ளுங்கள், தேர்தல் ஆணையம் … Read more

திரிணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ மரணம்

காளிகஞ்ச் காளிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம் எல்  ஏ நச்ருதின் அகமது மரணம் அடைந்துள்ளார். இன்று அதிகாலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கலிகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவுமா நசிருதீன் அகமது இன்று காலமானார். அந்தப் பகுதியில் இவரை ‘லால் டா’ என்று அறியப்படுவது வழக்கமாகும். நேற்று இரவு 11.50 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அதிகாலை மருத்துவமையில் மாரடைப்பால் நசிருதீன் … Read more

Men Psychology: ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை?

’பெண்களைவிட ஆண்கள் குறைவாகவே பேசுவார்கள். ஏனென்றால், ஆண்கள் தகவலை மட்டுமே சொல்பவர்கள். பெண்கள் தங்கள் உணர்வுகளையும் சேர்த்துப் பேசுபவர்கள். அதனால்தான், பெண்கள் அதிகம் பேசுகிறார்கள்’ – ஆண், பெண் பேச்சு தொடர்பான இந்தக் கருத்து பல காலமாக நம் சமூகத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை; ஆண்களுக்குப் பிடிக்காத வார்த்தைகள் என்னென்ன? மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் சொல்வதைக் கேளுங்கள். ஆண்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை? ‘’ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு கூடுதலாகப் பேசுவார்கள் என்பது மரபணு … Read more

‘திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியே காரணம்; பெரியார் இல்லை’ – கே.பி.ராமலிங்கம் பேச்சு

நாமக்கல்: “திமுக ஆட்சிக்கு வர ராஜாஜியும் அவரின் சுதந்திரா கட்சியும் தான் காரணமே தவிர பெரியார் காரணமில்லை” என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியுள்ளார். நாமக்கலில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் அவ்விழாவில் பங்கேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை. இதனை நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் … Read more

“பழங்குடியினர் நலத்துறைக்கு ‘உயர் வகுப்பு’ அமைச்சர் தேவை” – சுரேஷ் கோபி கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அவர் தனது கருத்தை திரும்பப் பெற்றார். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டதில் பேசிய நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி கூறுகையில், “பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பினர் மேற்பார்வையிட்டால் மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும். பழங்குடி சமூகத்தைச் … Read more

குழந்தைகளை தூக்கிலிட்ட பள்ளி நிர்வாகம்! வைரலாகும் வீடியோ..

Viral Video Of School Boys Hanging In Thread : தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குழந்தைகளை பள்ளி நிர்வாகம் தூக்கிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.