பி.சி.சி.ஐ.விருது 2024: ஷசாங்க் சிங், தனுஷ் கோட்டியானுக்கு லாலா அமர்நாத் விருது

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருது ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது. அதன்படி உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்கான ‘லாலா அமர்நாத் விருது’ ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின் சிற்ந்த ஆல் … Read more

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை: 30 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுவினர் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படைகள் மீதும் பிற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் தாக்குதல் மற்றும் சதி திட்டங்களை பாதுகாப்பு படையினர் அவ்வப்போது முறியடித்து வருகின்றனர். அவ்வகையில், பலுசிஸ்தானின் காலட் மாவட்டம் மங்கோசார் பகுதியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சாலையில் தடைகளை ஏற்படுத்த முயன்ற பயங்கரவாதிகளை … Read more

Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  ‘Budget 2025’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது. இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

வயதான பெண்மணிக்கு புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை: கிண்டி அரசு மருத்துவமனை  சாதனை

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை செய்து வயதான பெண்மணிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 64 பெண்மணி சலிமா பேகம். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், இதயத்தில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் … Read more

சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: நாட்டு மக்களின் சேமிப்பு, முதலீடு, நுகர்வு, வளர்ச்சி ஆகியவற்றை விரைவாக அதிகரிக்க மிகவும் வலுவான அடித்தளத்தை அமைக்கக்கூடிய பட்ஜெட் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்த தனது கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வீடியாவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களின் பட்ஜெட். இது ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் நிறைவேற்றும் பட்ஜெட். இளைஞர்களுக்காக நாங்கள் பல துறைகளைத் … Read more

பட்ஜெட் 2025-26: மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  காலை 10.45மணி அளவில்  மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து புறப்பட்டார் . அவர் இன்று  மதுபனி கலைக்கும், பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமைக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சேலை அணிந்துள்ளார். முன்னதாக மத்திய நிதி நிலைஅறிக்கைக்கு மத்திய கேபினட் ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் அமர்வான … Read more

வங்கதேசம் உள்பட அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் நிதி எவ்வளவு? வெளியான தகவல்

புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய வெளியுறவுத்துறைக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.5,483 கோடி என்பது பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அந்த தொகை என்பது சற்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விருத்திமான் சஹா

மும்பை, இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா (வயது 40) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அணியில் நிலையான இடம்பிடித்தார். இருப்பினும் கேஎல் ராகுலின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இவர் கடைசியாக … Read more

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு

காசா முனை, இஸ்ரேல், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, போர் ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய … Read more

Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' – சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?

முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் வரத் தொடங்கினர். உதித் நாராயணனின் பாடலை ரசித்துக் கொண்டே மேடையின் அருகே புகைப்படங்கள் எடுப்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். அவர்களுக்கு புகைப்படத்தைக் கொடுத்ததோடு அவர்கள் அனைவருக்கும் உதித் நாராயணன் முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. அந்தக் காணொளியை பதிவிட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவரை … Read more