“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்” – அன்புமணி ராமதாஸ் தகவல்

சேலம்: “தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த திருமண விழாவின்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “கல்வி என்பது மாநில அரசின் உரிமை. 45 ஆண்டுகளுக்கு முன்னர், மாநிலங்களின் பட்டியலில் கல்வி இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. நம்முடைய தாய்மொழி தமிழ். மிகப் பழமையான தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும். கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசு … Read more

பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: பாஜகவை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பாட்னா: பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு பாஜகவை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிஹாரில் 2005 முதல் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார். 2014 மே முதல் 2015 … Read more

சூடானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் பலி

சூடான்: சூடான் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது குடியிருப்பு பகுதியில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அவசரகால மீட்புப் படையினர் குழந்தைகள் உட்பட காயமடைந்த பொதுமக்களை அருகிலுள்ள … Read more

மீன் பீர் குடிக்கும் வீடியோ! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..வைரலாகும் வீடியோ

Viral Video Of Fish Drinking Beer : ஒரு மீனை ஒரு நபர் பீர் குடிக்க வைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

சிம்பு வெளியிட்ட பாலாஜி முருகதாஸின் ‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Silambarasan TR Released First Look Of Runner : சிலம்பரசன் TR வெளியிட்ட பாலாஜி முருகதாஸின்  ‘ரன்னர் ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – மகாசிவராத்திரி சிறப்பு தினத்தில் ரசிகர்களுக்கு பரிசு  

Nothing Phone 2…. 33% தள்ளுபடியுடன் கூடுதல் சலுகைகள்… மிஸ் பண்ணாதீங்க

இந்தியாவில் வரும் மார்ச் 4, தேதி அன்று   நத்திங் போன் 3a சீரிஸ் (Nothing Phone 3a Series) ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளன.  நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில், நத்திங் ஃபோன் 2  ஸ்மார்போனை மிக மலிவாக வாங்க வாய்ப்பு வந்துள்ளது.  நத்திங் ஃபோன் 2  ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு பம்பர் … Read more

நாளை கோவை  மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மின்தடை

கோவை நாளை  கோவை  மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் “கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நாளை (27.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை மாவட்டம்: இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், … Read more

மகா சிவராத்திரி: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி, மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இந்த புனித நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக நாள், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு … Read more

சாம்பியன்ஸ் டிராபி; டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

ஆப்பிரிக்க நாட்டில் மர்மக்காய்ச்சலுக்கு 53 பேர் பலி

கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சமீப காலமாக மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் சுமார் 420 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். எனவே இதுகுறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த … Read more