IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் – போட்டிகள் முழு விவரம் இங்கே!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சியை மேற்கொள்வற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை வர ஆரம்பித்துவிட்டார்கள். … Read more

திருப்பூர்: கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றபோது, எதிர் திசையில் நடந்து வந்த 3 பேர், வெங்கடேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து அலைபேசி மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து வெங்கடேசன் நல்லூர் … Read more

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம்: மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரம் கூறும் தகவல்கள்: நாட்டில் தற்போது அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டப்படி அரசு பணியாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான வாய்ப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி … Read more

Kayadu Lohar : கோலிவுட்டின் புதிய `அஸ்ஸாம்’ க்ரஷ் – யார் இந்த `டிராகன்’ கயடு லோகர்?

கோலிவுட்டின் புதிய `அஸ்ஸாம்’ க்ரஷ்கயடு லோகர் `டிராகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயடு லோகர்தான் தற்போதைய சோசியல் மீடியா சென்ஷேஷன்! தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே ஆழமாக தன்னை பதிவு செய்து பல இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டிலும் இடம் பிடித்திருக்கிறார் கயடு லோகர். இப்படியான தமிழ் மக்களின் அன்பு அவரை நெகிழச் செய்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார். … Read more

கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறிய விராட் கோலி

துபாய் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் விராட் கோலி ஒரு இடம்  முன்னேறி உள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) … Read more

`நியாயமாக இந்த உணர்வு தமிழ் மீது இருந்திருக்க வேண்டும்’ – பாஜக-வுக்கு ஸ்டாலின் பதில்

ரயில் நிலையங்கள், தபால் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு குறித்த பாஜக-வினர் விமர்சனத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில், தனது பதிலாக பதிவு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், ” தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. அதனை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம். இந்தி எழுத்துகளை அழித்துவிட்டால் வடமாநிலப் பயணிகள் எப்படி ரயில் நிறுத்தங்களை அடையாளம் காண்பார்கள்?” என்று இங்கேயுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த … Read more

“தமிழகத்தில் 2026-ல் என்டிஏ ஆட்சியை பாஜக நிறுவும்!” – கோவையில் அமித் ஷா நம்பிக்கை பேச்சு

கோவை: “தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று கோவையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் நிதிப் பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அவர் பேசினார். கோவை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைக்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக … Read more

பாட்னாவில் அகத்தியர் குறித்த கருத்தரங்கு: ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்பு

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவில் அகத்தியர் குறித்த ஒருநாள் கருத்தரங்கு இன்று (பிப்.26) நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமத்தை ஒட்டி நடைபெறும் இந்நிகழ்வில், பிஹார் மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்கிறார். வட மற்றும் தென் மாநில மக்களை ஒன்றிணைக்க உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசியில், காசி தமிழ் சங்கமங்கள் 2022-ம் ஆண்டு முதல் நடைபெறுகின்றன. இதன் முதல் சங்கமத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதன் மூன்றாவது ஆண்டாக கேடிஎஸ் 3.0 பிப்ரவரி … Read more

குட் பேட் அக்லி படத்தில் நடித்த ஷாலினி? வைரலாகும் போட்டோ..

Shalini Acted In Good Bad Ugly Movie : அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் ஷாலினி கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

தவெக ஆட்சியை பிடிக்க ‘இதை’ செய்ய வேண்டும்! பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகம்..

TVK Anniversary Prashant Kishor Speech : தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடைப்பெற்றது. இதில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், அரசியல் வியூக வடிவமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.