Month: February 2025
பாஜகவில் இருந்து விலகியது ஏன்? – ரஞ்சனா நாச்சியார் விளக்கம்
சென்னை: தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் பாஜகவில் இருக்க வேண்டுமா என கேள்வியெழுப்பியது. தேசியமும், தெய்வீகமும் குறுகிய வட்டத்தில் சுருங்கிப் போவதில் உடன்பாடு இல்லை. என்னைப் பொருத்தவரை மும்மொழிக் கொள்கை … Read more
மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,000 கோடி இழப்பு: சிஏஜி அறிக்கை
புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொது கணக்குக் குழு (சிஏஜி – CAG) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பண மோசடி வழக்குகள் பதியப்பட்டன. இதன் காரணமாக, திகார் சிறையில் கேஜ்ரிவால் … Read more
மார்ச் 12 ஆம் தேதி புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி மார்ச் 12 அன்று புதுச்சேரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 1 ஆம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து பிற மாநிலங்களில் 2025-26-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வரிசையில், தமிழக பட்ஜெட் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி … Read more
கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன.. எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், … Read more
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா போட்டி கைவிடப்பட்டால் என்ன ஆகும்? – அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு
பெர்த், சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதேபோல், செவ்வாய் … Read more
“பொறுத்தது போதுமடா, பொங்கி எழ வந்துள்ளேன்!” – செல்லூர் ராஜூ பேச்சால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
மதுரை: “பொறுத்தது போதுமடா, பொங்கி எழுவதற்கு வந்துள்ளேன்,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கூறிய பின் திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “நான் இன்று இந்த கூட்டத்துக்கு வந்தது, ஊர் சேர்ந்து நானும் தேர் இழுக்க வந்துள்ளேன். அரசியல் பேச வரவில்லை. சமீப நாட்களாக மாநகராட்சியை பற்றி வருகிற செய்திகளை பார்த்து பொறுத்தது போதுமடா பொங்கி எழு … Read more
நடிகை ப்ரீத்தி ஜிந்தா Vs கேரள காங்கிரஸ் – வார்த்தைப் போரின் பின்னணி என்ன?
திருவனந்தபுரம்: ‘பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவிடம் அவரது சமூக வலைதளப் பக்கம் ஒப்படைக்கப்பட்டது’ என கேரளா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா எதிர்வினையாற்றியதன் தொடர்ச்சியாக, இரு தரப்புக்கும் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. கேரளா மாநில காங்கிரஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், ‘கடந்த வாரம் வங்கி ஒன்று திவலான நிலையில், பாலிவுட் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தை … Read more