இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த 37 வயதாகும் இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி வழக்கு

சென்னை: இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட பழனிவேல் என்பவரது மகன் சரவணமுத்து, இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக சரவணமுத்துவும், அவரது மனைவி தமிழ்செல்வியும் அகதிகளாக கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். பின்னர், … Read more

நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்க முயற்சி: மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: “நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்தால் 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக அரசு செயல்படுவது தெளிவாகும். மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பது, கல்வித் அதிகரித்து வணிக மயமாக்குவது, பாடத் திட்டங்கள், கல்வி நிறுவனங்களை வகுப்புவாத மயமாக்குவது என்ற … Read more

தாய்லாந்தில் கட்டிய 30 மாடி கட்டிடம் தரைமட்டம்: சீன கட்டுமான நிறுவனத்தின் 5 பேர் கைது

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் கட்டிய 30 மாடி கட்டிடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது தொடர்பாக சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்தில் கடந்த 28-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த நாட்டின் தலைநகர் பாங்காக்கில் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. பாங்காக்கில் பல்வேறு உயரமான கட்டிடங்கள் உள்ளன. நிலநடுக்கத்தின்போது சுமார் 95 சதவீத உயரமான கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி … Read more

புதுச்சேரியில் ஒரே தெருவில் 80 பிரியாணி கடைகள் – தரத்தை முன்வைத்து நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி: “புதுச்சேரியில் பிரியாணி கடைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தரத்தை பார்த்து யார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரசும், நுகர்வோரும் இப்பிரச்சினையை கண்டுக்கொள்வதில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். திருக்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை இணைந்து நடத்திய உலக நுகர்வோர் தின விழா இன்று (மார்ச் 31) நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது: “மருந்து, பால் தரமாக இல்லை என … Read more

சாலைகளில் ரம்ஜான் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உ.பி.யில் போலீஸை கண்டித்து முஸ்லிம்கள் கோஷம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில், “முஸ்லிம்கள் மட்டும் தெருக்களில் தொழுகை நடத்த வில்லை. இந்துக்கள் தெருக்களில் ஹோலி கொண்டாடு கிறார்கள், சிவராத்திரியும் தெருக்களில் கொண்டாடப்படுகிறது. காவடிகளுடன் தெருக்களில் வலம் வருகிறார்கள். ராமநவமி யாத்திரையும் தெருக்களில் நடத்தப்படுகிறது. தீபாவளியன்று தெருக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி தெருக்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல … Read more

கழிவறையில் வாழும் சீன பெண்!

பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் (18). இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு வீட்டின் வாடகை ரூ.9,500 முதல் ரூ.21,000 வரை உள்ளது. யாங் பெறும் ஊதியத்தில் பாதியை அவரது பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதமுள்ள ஊதியத்தில் அவரால் வீட்டு வாடகை கொடுப்பது கடினம். இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் கழிப்பறையை வாடகைக்கு தருமாறு கடை … Read more

MI vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த அறிமுக வீரர்.. யார் இந்த அஷ்வானி குமார்?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 31) 12வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.  இதில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மும்பை … Read more

பிரதமரின் தனிச் செயலாளராக IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான நிதி திவாரி, 2013 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார். தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் இவர் பிரதமர் அலுவலகத்தில் சேருவதற்கு முன்பு, வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) ஆயுதக் குறைப்பு மற்றும் … Read more

முத்து காமிக்ஸ்: "சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காத சந்தோஷம் அது" – நெகிழும் பொன்வண்ணன்

கதை சொல்லலில் எத்தனையோ நவீன கலை வடிவங்கள் வந்தாலும் சுவாரஸ்யமும் கற்பனையும் சித்திரமும் செழித்துக்கிடக்கும் ஒரு கலைவடிவம் காமிக்ஸ். தமிழில் காமிக்ஸ்களை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவரான முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தர பாண்டியன் சமீபத்தில் காலமானார். அவரது மரணத்தை ஒட்டி சென்னையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அதில் காமிக்ஸ் எழுத்தாளர் கிங் விஸ்வா, நடிகர் பொன்வண்ணன், வைட் ஆங்கிள் ரவிசங்கர், யுவகிருஷ்ணா, ஜா. ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் பொன்வண்ணன் இந்த நிகழ்வில், சிறுவயதில் காமிக்ஸ் … Read more

‘ரவுடிகள், குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக் கூடாது’ – புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரி: ரவுடிகள், குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக் கூடாது என்று கலால் விதிகளில் திருத்தம் செய்த அரசாணை புதுச்சேரியில் விரைவில் அமலாகிறது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபான கடைகள், ரெஸ்ட்ரோ பார்களுக்கு கலால் துறை அனுமதி தந்துள்ளது. இங்கு குற்றவாளிகள், ரவுடிகள் வேலைக்கு வைப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் அரசுக்குச் சென்றன. சுற்றுலா பயணிகளிடம் மோதலும் ஏற்பட்டதாக போலீஸுக்கு புகார்கள் சென்றனர். சில மதுபானக் கடைகளில் உரிமையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களை … Read more