ஒடிசாவில் தடம்புரண்ட பெங்களூரு – காமாக்யா அதிவிரைவு ரயில்: ஒருவர் உயிரிழப்பு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் பெங்களூரு – காமாக்யா ஏசி அதிவிரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூருவில் இருந்து குவாஹாட்டியில் இருக்கும் காமாக்யா நேக்கி சென்று கொண்டிருந்த ஏசி அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை தடம்புரண்டுள்ளது. சம்பவத்தை உறுதிப்படுத்திய மாவட்ட ஆட்சியர் தத்தாத்ரயா பவுசாஹேப் ஷிண்டே உயிரிழப்பு மற்றும் காயம்பட்டவர்களின் எண்ணிக்கையையும் தெரிவித்தார். அவர் கூறுகையில், “ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், ஏழு … Read more

ஜனநாயகன் படத்தில் இணைந்த புது நடிகர்! விஜய்யுடன் 25 வருடம் கழித்து நடிக்கிறார்..

Nizhalgal Ravi To Reunite With Vijay : நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் ஒரு பிரபல நடிகர் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

DC vs SRH: ஹைதராபாத்தை துவம்சம் செய்த ஸ்டார்க், குல்தீப்.. டெல்லி அணிக்கு தொடர் வெற்றி

ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி இன்று (மார்ச் 30) விசாகப்பட்டினம், டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற ஹைதரபாத்  அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவும் களம் இறங்கினார். வழக்கமாக தொடக்கத்தில் … Read more

Vijay Sethupathi: `போக்கிரி' பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி – அசத்தும் லைன் அப்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘மெரி கிறிஸ்துமஸ்’, ‘மஹாராஜா’, ‘விடுதலை பாகம் -2’ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிப்பைத் தாண்டி கடந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி தூள் கிளப்பியிருந்தார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி பிரபல டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது படக்குழு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. Vijay … Read more

யோகா தினம், மாணவர்களுக்கு அறிவுரை, தண்ணீர் சேமிப்பு பெருமைகளை மன் கி பாத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 120-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசும்போது, கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில், 1,100 கோடி கன மீட்டர் அளவுக்கு தண்ணீர் சேமிப்பு நடந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற தண்ணீர் தேக்க கட்டமைப்புகளின் வழியே இது சாத்தியப்பட்டு … Read more

சென்னையில் களமிறங்கும் பிரேசில் ஜாம்பவான் கால்பந்து அணி

சென்னை, பிரசாந்தா பானர்ஜி தலைமையிலான ஆல்-ஸ்டார் இந்திய கால்பந்து அணியுடன் காட்சி போட்டியில் விளையாட, 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணி சென்னை வந்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் காட்சி போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆல்-ஸ்டார் இந்திய அணியில் சண்முகம் வெங்கடேஷ், சையத் ரஹிம் நபி, மெக்தாப் ஹூசைன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். பிரேசில் அணியில் ரொனால்டினோ, காபு, ரிவால்டோ, கில்பேர்டோ … Read more

66 வயதில் 10வது குழந்தையை பெற்றெடுத்த பெண்! இரும்பு பெண்தான் பாேல..

Woman Gave Birth To 10th Baby At 66 Age : 66வயதில், ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்’. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடதக்கது. திரையரங்குகளில் அதிரடியான வசூலை அள்ளிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படத்திற்கு தற்போது சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. Empuraan படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும் தலைவர்களுக்கும் இழிவுப்படுத்தும் … Read more

“என்னால் யாருக்கும் பிரச்சினை வராது; எனக்கு பாஜக வளர்ச்சியே முக்கியம்” – அண்ணாமலை

கோவை: “என்னால் யாருக்கும் பிரச்சினை வராது. மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம்” என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள். சென்னை -ராமேஸ்வரம் இடையே தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மூன்றாவது ரயில் திருவாரூர், திருத்துரைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ராமநாதபுரம், … Read more

“இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” – நாக்பூரில் பிரதமர் மோடி பெருமிதம் 

நாக்பூர்: “ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடம் இருக்கும் டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு அங்கு மாதவ் நேத்ராலயா பிரிமீயம் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோடி பிரதமரான பின்னர் ஆர்எஸ்எஸ் மையத்துக்குச் … Read more