இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்

புதுடெல்லி, மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டாலே நகரருகே கடந்த 28-ந்தேதி மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்று சிறப்பு மிக்க துறவிகளுக்கான மடாலயம் கூட இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளை சந்தித்துள்ளன. மியான்மரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா சாம்பியன்

மியாமி, மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய சபலென்கா 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் . இது அரினா சபலென்கா வென்ற முதல் மியாமி ஒபன் … Read more

Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" – பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மோகன்லால் இது தொடர்பாக மன்னிப்புக் கேட்கவுள்ளதாக மலையாள இயக்குநரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான மேஜர் ரவி தெரிவித்துள்ளார். படத்தின் டிஸ்கிளைமரில் அனைத்துக் காட்சிகளும் கற்பனையானவை எனக் கூறப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட கலவரம் சார்ந்த காட்சிகள், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸை இழிவுபடுத்துவதாக வலதுசாரி ஆதரவாளர்கள் … Read more

தமிழகத்தில் ஏப்ரல் 2, 3 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி கோயம்பத்தூர், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஏப்ரல் 3 ஆம் தேதி கோயம்பத்தூர் , நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மார்ச்.,30 … Read more

விவாகரத்துக்கு பிறகு டேட்டிங் செயலி மூலம் ஏற்பட்ட காதலால் ரூ.6.3 கோடியை இழந்த இளைஞர்

புதுடெல்லி: காதல் விவகாரத்தால் டெல்லி நொய்டாவை சேர்ந்த இளைஞர் ரூ.6.3 கோடியை இழந்துள்ளார். டெல்லி அருகேயுள்ள நொய்டாவின் செக்டர் 76-வது பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் மூலம் அண்மையில் விவாகரத்து பெற்றனர். இதன்பிறகு டேட்டிங் செயலி மூலம் புதிய காதலியை நொய்டா இளைஞர் தேடினார். கடந்த டிசம்பரில் டேட்டிங் செயலி வாயிலாக அனிதா என்ற பெண் அவருக்கு அறிமுகமானார். ஹைதராபாத்தை சேர்ந்த அந்த பெண், நொய்டா இளைஞருடன் … Read more

மியான்மர் பூகம்பம்: நில அதிர்வுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்; பலி எண்ணிக்கை 1644 ஆக அதிகரிப்பு

நேப்பிடா: மியான்மரை வெள்ளிக்கிழமை 7.7 அளவில் தாக்கிய சக்தி வாய்ந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. அதன் அண்டை நாடான தாய்லாந்தில் 17 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மியான்மரின் மாண்டலே பகுதியில் இன்று (மார்ச் 30) தாக்கிய பின்அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பூகம்பத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாண்டலே நகரில் ஞாயிற்றுக்கிழமை தாக்கிய பின்அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முதலில் லேசாக தொடங்கிய அதிர்வு பின்பு 6.7 அளவில் தீவிரமடைந்தது.அதேபோல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,408 … Read more

"உதயநிதியின் பி.ஏ".. லட்சக்கணக்கில் கைவரிசை காட்டிய திமுக பெண்!

சேலம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பி.ஏ. என கூறி ரூ. 2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஐபிஎல் கோப்பை இந்த முறை ஆர்சிபி அணிக்கு தான் – தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

Dinesh Karthik RCB: ஐபிஎல் 2025 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அந்த அணி, இந்த ஆண்டில் கோப்பையை வெல்லப்போகும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை அந்த அணி  விளையாடிய இரண்டு போட்டிகளையும் பார்க்கும்போது இதுவரை நடைபெற்ற சீசன்களில் அந்த அணி விளையாடியதில் இருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பீல்டிங்கின்போது வழக்கமாக அந்த … Read more

ஏ.டி.எம். கட்டணம் உயர்வு: மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்

புதுடெல்லி, வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம். மூலம் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஏ.டி.எம். கட்டண உயர்வு வேதனை தருகிறது. துரதிர்ஷ்டவசமாக நமது வங்கிகளை மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் … Read more

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை, உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ் தாக்கர் , தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை எதிர்கொண்டார் . இந்த ஆட்டத்தில் 5-11, 12-10, 3-11, 11-6, 11-1 என்ற செட் கணக்கில் லிம் ஜோங்ஹூனை தோற்கடித்து மானவ் தாக்கர் அரையிறுதிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டேபிள் டென்னிஸ்  இந்திய … Read more