பொதுமக்கள் பணத்தை வீணடித்த வழக்கு: அர்விந்த் கேஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை

பொதுமக்கள் பணத்தை வீணடித்த வழக்கில் டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி போலீஸார், நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு டெல்லியிலுள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நேஹா மித்தல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது: 2019-ல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொதுமக்கள் பணத்தை வீணடித்து டெல்லி முழுவதும் … Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக கல்வி, … Read more

விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம் முடித்துவைப்பு

விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உண்ணாவிரதம் முடித்துவைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவரான ஜக்ஜித் சிங் தல்லேவால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி எல்லைப்பகுதியில் தொடங்கினார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பஞ்சாப் அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் … Read more

“அவர்களுக்குள் இரண்டாம் இடத்துக்கே போட்டி!” – அதிமுக, தவெக குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்துக்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 29) மாலை சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ … Read more

கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா 2024 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசியதாவது: இந்த புதிய சட்டம் காலனித்துவ கால சட்டங்களை அகற்றுவதற்கும், வணிகம் செய்வதற்கு எளிதாக கடல்சார் விதிமுறைகளை எளிமையாக்கும் மத்திய அரசின் பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். 1925-ம் ஆண்டு கடல் மூலம் இந்திய சரக்குகளை எடுத்துச் செல்லும் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் … Read more

அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பிரதமரை சந்தித்து முறையிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி…

டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த  சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தார். இது அரசியல் களத்தில், தலைவர்களின்  புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. “தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை”  பிரதமர் மோடியிடம்  காங்கிரஸ் எம்.பி. நேரரில் முறையிட்டார். இது தொடர்பாக  கார்த்தி சிதம்பரம்  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “இன்று (நேற்று)  பிரதமரை அவரது நாடாளுமன்ற … Read more

GT vs MI : 'மும்பை அணியில் இடம் பெறாத இளம் வீரர் விக்னேஷ் புத்தூர்!'

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், அந்த விக்னேஷ் புத்தூரை இப்போது நடந்து வரும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டிராப் செய்திருக்கிறது. Vignesh Putur | விக்னேஷ் புத்தூர் விக்னேஷ் புத்தூர் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர். கேரளா ப்ரீமியர் லீக் போட்டியில் கவனம் ஈர்க்கும் வகையில் ஆடியிருக்கிறார். அவரை மும்பை அணியின் திறன் தேடும் குழு கண்டறிந்து … Read more

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2022-23, 2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கல்வி கட்டணக் குழு கடந்த 2022 அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை … Read more

பாஜக சார்பில் இன்று டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி

பாஜக மகளிர் அணி சார்பில் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு இன்று (மார்ச் 29) டெல்லியில் புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை பெற்றவர் தமிழகத்தின் சிவகங்கை ராணி வேலு நாச்சியார். அவருக்கு பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் இன்று புகழஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடகம் இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் ரேகா … Read more

மனோஜ் பாரதிராஜாவுக்கு மன அழுத்தமா? சாடும் இயக்குநர் பேரரசு

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இயக்குநர் பேரரசு கடுமையாக சாடி உள்ளார்.